இலங்கை இஸ்லாமிய மாணவர் அமைப்பினால் 100 மாணவர்களுக்கு அப்பியாசக் கொப்பிகள் வழங்கி வைப்பு

0
95

unnamed-1(ஏ.எச்.ஏ. ஹுஸைன்)

இலங்கை இஸ்லாமிய மாணவர் அமைப்பினால் ஏறாவூர் மீராகேணி கிராமத்தைச் சேர்ந்த தெரிவு செய்யப்பட்ட 100 மாணவர்களுக்கு 650 அப்பியாசக் கொப்பிகள் வழங்கி வைக்கப்பட்டதாக அதன் ஏறாவூர்க் கிளைத் தலைவர் எம்.என்.எம். ஜெஸ்லான் தெரிவித்தார்.

ஏறாவூர் மீராகேணி மாக்கான் மாக்கார் வித்தியாலய கேட்போர் கூடத்தில் வியாழக்கிழமை (செப்ரெம்பெர் 14, 2016) மாலை இடம்பெற்ற இந்நிகழ்வில் பயனாளிகளான மாணவர்கள் இந்த அப்பியாச் கொப்பிகளைப் பெற்றுக் கொண்டனர்.

unnamed-4கிராமப்புற வறிய மாணவர்களின் கல்விக்கு உதவிக்கரம் நீட்டுவதே தமது திட்டத்தின் நோக்கம் என்றும் ஜெஸ்லான் மேலும் தெரிவித்தார்.

கட்டார் நாட்டில் தொழில் புரிகின்ற ஏறாவூர் நலன்விரும்பிகள் சுமார் 60 ஆயிரம் ரூபாய் பெறுமதியான இந்த அப்பியாசக் கொப்பிகளை கொள்வனவு செய்து அன்பளிப்பாக அனுப்பியிருந்தனர் என்று ஜெஸ்லான் குறிப்பிட்டார்.

LEAVE A REPLY