பெண்கள் நாற்றுமேடைத் திட்டம் ஏறாவூரில் அமுலாக்கம்

0
124

(ஏ.எச்.ஏ. ஹுஸைன்)

unnamedபெண்களை நாற்றுமேடைகள் அமைத்து விவசாயத்தில் ஈடுபடுத்தும் “பெண்கள் நாற்றுமேடைத் திட்டம்” ஏறாவூர் விவசாய பெரும்பாகப் பிரிவில் அமுலாக்கப்படுவதாக ஏறாவூர் நகர பெரும்பாக விவசாய போதனாசிரியை எம்.எச். முர்ஷிதா ஷிரீன் தெரிவித்தார்.

இதன் பிரகாரம் ஏறாவூர் நகர பெரும்பாக விவசாயப் பிரிவில் இருந்து தெரிவு செய்யப்பட்ட 10 பெண்களுக்கு விதை உள்ளீடுகள் வியாழக்கிழமை (செப்ரெம்பெர் 15, 2016) விநியோகிக்கப்பட்டன. ஏறாவூர் நகர விவசாய விரிவாக்கல் நிலையத்தில் இடம்பெற்ற இந்நிகழ்வில் ஏறாவூர் நகர பிரதேச செயலாளர் எஸ்.எல். முஹம்மத் ஹனீபா, பெரும்பாக உத்தியோகத்தர் ஐ. பதுர்தீன், ஏறாவூர் பெரும்பாக விவசாய போதனாசிரியை எம்.எச். முர்ஷிதா ஷிரீன் ஆகியோரும் பயனாளிகளும் கலந்து கொண்டனர்.

LEAVE A REPLY