இஸ்ரேலின் கைதிகள் பரிமாற்ற முயற்சியை ஹமாஸ் நிராகரிப்பு

0
183

coltkn-mss_cmyஇரு இஸ்ரேல் இராணுவத்தினரின் சடலங்களுக்காக பத்தொன்பது பலஸ்தீன சடலங்கள் மற்றும் பல கைதிகளை விடுவிக்கும் கைதிகள் பரிமாற்ற உடன்படிக்கை ஒன்றை ஹமாஸ் அமைப்பு நிராகரித்ததாக இஸ்ரேல் குறிப்பிட்டுள்ளது.

இஸ்ரேல் கைதிகள் மற்றும் காணாமல்போனோருக்கு பொறுப்பு வகிக்கும் லியோ லோடன் குறிப்பிடும்போது, இந்த கைதிகள் பரிமாற்றத்திற்கான இரண்டாவது சலுகையையும் காசாவை ஆளும் ஹமாஸ் நிராகரித்துவிட்டதாக தெரிவித்துள்ளார்.

இஸ்ரேல் கடந்த 2014 தொடக்கம் 18 பலஸ்தீனர்கள் மற்றும் 19 பலஸ்தீன சடலங்களை தடுத்து வைத்திருப்பதாக லோடன் குறிப்பிட்டார். இவர்களை இரண்டு இஸ்ரேல் வீரர்களின் சடலங்களுக்காக பரிமாற்றிக் கொள்ளும் கோரிக்கையையே ஹமாஸ் நிராகரித்தாக தெரிவித்துள்ளார்.

கடந்த 2014 காசா யுத்தத்தில் கொல்லப்பட்ட ஒரோன் ஷோல் மற்றும் ஹாதர் கோல்டிங் என்ற இரு இஸ்ரேலிய வீரர்களின் சடலங்களே ஹமாஸ் வசமிருப்பதாக நம்பப்படுகிறது.

இந்த சடலங்களை மீட்டு வருவதாக இஸ்ரேல் பிரதமர் பென்ஜமின் நெதன்யாகு இம்மாதம் உறுதி அளித்திருந்தார்.

இஸ்ரேல் மற்றும் ஹமாஸுக்கு இடையில் 2008 தொடக்கம் 2014 காலப்பகுதியில் மூன்று யுத்தங்கள் இடம்பெற்றன. காசா பகுதி கடந்த ஒரு தசாப்தமாக இஸ்ரேலால் முடக்கப்பட்டிருப்பதோடு வெளியுலக தொடர்புக்கான அதன் மாற்று வழியான எகிப்து எல்லையும் பெரும்பாலும் மூடப்பட்டே உள்ளது.

Source: Thinakaran

LEAVE A REPLY