அப்டேட் இல்லாத உடல் உறுப்புக்கள்

0
251

(முஹம்மது ராஜி)

technoவழமைக்கு மாற்றமான சத்தம் எனது மொபைல் போனில் இருந்து வந்த போது உற்று கவனித்ததில் அது ஆன்ராய்ட் அப்டேட் 6 வந்திருப்பதாக அலார்ட் காட்டியது.

கிளிக் பண்ணிய போது அந்த புதிய அப்டேட்டில் பேட்டரியில் இம்ப்ரூமண்ட், அதிக வேகம், சிறப்பான மெமோரி மேனேஜ்மண்ட் என்று தொடர்ந்தது அந்த பட்டியல்.

பூரணத்துவம் என்பது டெக்னாலஜியில் எப்போது வரும்? எனக்குள்ளேயே கேட்டுக்கொண்டேன்.

90 களின் கடைசியில் நோக்கியா 3310 வெளிவந்த போது> இன்னமும் ஞாபகம் இருக்கிறது கையடக்க, அழகிய போன், டெக்னாலஜியின் மைல் கல்லாக அப்போது அது கருதப்பட்டது. இப்போது அது குப்பைத்தொட்டி. பழைய டெக்னோலஜி.

ஆரம்பத்தில் செங்கல்லின் சைசில் செலியூலர் போன் முதன் முதலில் வெளிவந்த போது ‘வயர் இல்லாமல் தொலைபேசியா…’ என்று மூக்கில் விரல் வைத்தது உலகம். அதுவே இப்போது குப்பைக்குள் போடக்கூட தகுதி இல்லாத பொருளாகி விட்டது.

சக்கரம் கண்டு பிடிக்கப்பட்டபோது அப்போதைய லேட்டஸ்ட் டெக்னோலஜி அதுதான். அதேபோலத்தான் ரேடியோ, டீவி, வாஷிங் மெஷின், கார், பிளேன், மொபைல் போன், இன்டர்நெட் எல்லாமே.

ஆனாலும் கண்டுபிடிக்கப்பட்ட ஒன்றிலும் மனிதன் பூரணத்துவம் என்கிற பண்பை புகுத்த தவறி விடுகிறான்.

அதனாலேதான் விண்டோஸ் ஒபரேட்டிங் சிஸ்டம் முதல் ஒவ்வொரு ஒபரேட்டிங் சிஸ்டங்களிலும் அப்டேட் என்பதும் அப்கிரேட் என்பதும் முடிவில்லாமல், திருப்தி இல்லாமல், பூரணத்துவம் இல்லாமல், அடுக்கடுக்காய் வந்த படி உள்ளன.

மனிதனின் கண்டுபிடிப்புக்கள் அப்படி இருக்க, இறைவனின் கண்டுபிடிப்புக்குள் கண்களை கொஞ்சம் ஓட விட்டால் பூரணத்துவம் என்பது பூரணமாகவே இருக்கின்றது.
எந்த அப்டேட் என்பதும் எந்த அப்கிரேட் என்பதும் தேவையில்லாதவை.

நொக்கியாக்களை போலவோ, ஆப்பிள்களை போலவோ, சாம்சங்குகளை போலவோ, பெறுமானத்தேய்வோ, பெறுமதி மாற்றங்களோ ஏற்படாதவைதான் எல்லாம் வல்ல அல்லாஹ் நமக்கு அளித்துள்ள உடல் உறுப்புகள்.

பெறுமதியால் மதிப்பீடு செய்ய முடியாத என்றுமே லேட்டஸ்ட் டெக்னோலஜி கொண்ட கண்கள், நாக்கு, காதுகள், மூளை, இதயம், ஈரல், சிறுநீரகம், இரத்தம் என்று முடிவில்லாமல் அடுக்க முடியும் நமது உடல் உறுப்புக்களை.

அவை ஒவ்வொன்றிற்கும் உள்ள பெறுமதிகளை சில வேளைகளில் நாம் குறைத்து மதிப்பிட்டு விடுகிறோம்.

எந்த அப்டேட்டுக்களோ, எந்த அப்கிரேட்டுக்களோ இல்லாமல் பூரணத்துவமாக நமது உடலையும், உடல் உறுப்புக்களையும் படைத்த அல்லாஹுவுக்கே அனைத்து புகழும். அல்ஹம்துலில்லாஹ்.

-அல்லாஹு அக்பர்-

LEAVE A REPLY