தற்கொலை செய்வதில் இலங்கைக்கு 20ஆவது இடம்

0
149

suicideஉலகில் தற்கொலை செய்து கொள்ளும் சம்பவங்கள் இடம்பெறும் நாடுகளின் வரிசையில் இலங்கை 20ஆவது இடத்தில் இருப்பதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் பாலித மஹிபால தெரிவித்துள்ளார்.

சுகாதார அமைச்சில் இன்று(14) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். தற்கொலை செய்து கொள்வது பிரதான பொது சுகாதார பிரச்சினையாக உள்ளதாகவும் உலகில் 40 விநாடிகளுக்கு ஒருவர் தற்காலை செய்து கொள்ளும் சம்பவங்கள் நடப்பதாகவும் ஆண்கள் தற்கொலை செய்து கொள்வது அதிகரித்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

உலக சுகாதார அமைப்பின் புள்ளிவிபரங்களின் படி உலகில் வருடாந்தம் 8 இலட்சம் பேர் தற்கொலை செய்து கொள்கின்றனர். இலங்கையில் 2015 ஆம் ஆண்டில் 3 ஆயிரம் பேர் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். இவர்களில் பெரும்பாலானவர்கள் ஆண்கள்.

குடும்ப பிரச்சினை, காதல் முறிவு, நோய்கள், மனநோய், பொருளாதார பிரச்சினைகள், மதுபான பாவனை போன்ற காரணங்களால் ஆண்கள் அதிகளவில் தற்கொலை செய்து கொள்கின்றனர். விவசாய இரசாயனங்கள் பயன்படுத்துவதும் தற்கொலைகளுக்கு காரணமாக அமைந்துள்ளது. களை நாசனி போன்ற இரசாயனங்களை இலகுவாக கொள்வனவு செய்யும் முறையில் மாற்றங்களை செய்ய வேண்டும்.

மதுசாரம் தொடர்பில் தேசிய கொள்கை ஒன்றை வகுப்பதும் மிகவும் முக்கியமானது. தற்கொலைகளை தடுக்க முடியும் 15 வயது முதல் 29 வயதானவர்கள் தற்கொலை செய்து கொள்வது கவலைக்குரியது எனவும் பாலித மஹிபால கூறியுள்ளார்.

-Enkal Teasam-

LEAVE A REPLY