தைவானை மிரட்டும் புயல்: விமானச் சேவைகள் ரத்து

0
175

4e0a8961-e4d5-4d1e-9f12-a288650c0127_l_styvpfஇந்த ஆண்டு உலகை பதம்பார்த்த புயல்களில் மிகவும் பலமிக்கதாக கருதப்படும் ‘மெரான்ட்டி’ புயல் மணிக்கு சுமார் 216 கிலோமீட்டர் வேகத்தில் தைவான் நாட்டின் கடலோரப் பகுதிகளை பதம்பார்த்தபடி சீனாவை நோக்கி நகர்ந்து வருகிறது.

மிகவும் ஆபத்தான ஐந்தாம் எண் புயலாக அறிவிக்கப்பட்டுள்ள ‘மெரான்ட்டி’யின் வேகத்துக்கு ஈடுகொடுக்க முடியாமல் மரங்களும், மின்சார ஒயர்களும் விழுந்து கிடப்பதால் கிழக்கு தைவானில் உள்ள பல குடியிருப்பு பகுதிகள் இருளில் மூழ்கி கிடக்கின்றன.

கவோசியுங் உள்பட சில முக்கிய நகரங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. ரெயில் சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. மின்தடையால் கோசியுங் நகரில் சுமார் 2 லட்சம் வீடுகள் இருளில் மூழ்கி கிடக்கின்றன.

பாதுகாப்பு கருதி தாழ்வான இடங்களில் வசித்துவந்த சுமார் 1500 பேர் பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். கவோசியுங் சர்வதேச விமான நிலையமும் மூடப்பட்டுள்ளதால் உள்நாடு மற்றும் வெளிநாட்டு விமானச் சேவைகள் வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது.

201609141547555459_schools-shut-flights-cancelled-as-super-typhoon-meranti-hits_secvpfதெற்கு சீனாவில் உள்ள குவாங்டாங் மற்றும் பியூஜியான் மாகாணங்களின் வழியாக இந்த புயல் நாளைக்குள் கரையை கடக்கும் என எதிர்பார்க்கப்படும் நிலையில் புயலுடன் கூடிய மழை, வெள்ளத்தை சமாளிக்கும் முன்எச்சரிக்கை நடவடிக்கைகளில் தைவான் அரசு மும்முரம் காட்டி வருகிறது.

கடந்த 2009-ம் ஆண்டு தைவானை சூறையாடிய மோராகோட் புயலுக்கு சுமார் 700 பேர் பலியானார்கள். 300 கோடி டாலர்களுக்கும் அதிகமான சேதத்தை அந்நாடு சந்திக்க நேர்ந்தது நினைவிருக்கலாம்.

LEAVE A REPLY