இரட்டைக் கொலைச்சம்பவம்: ஏறாவூர் மக்கள் மத்தியில் பெரும் கவலையையும் அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது: எம்.எஸ்.சுபைர்

0
409

(விசேட நிருபர்)

unnamedஏறாவூர் இரட்டைக் கொலைச்சம்பவம் ஏறாவூர் மக்கள் மத்தியில் பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளதுடன் அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது என கிழக்கு மாகாண சபை உறுப்பினர் எம்.எஸ்.சுபைர் தெரிவித்தார்.

அவர் புதன்கிழமை (14.9.2016) ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

கடந்த ஞாயிற்றுக்கிழமை(11.9.2016) யன்று ஏறாவூர் முகாந்திரம் வீதியை அண்டிய பிரசேத்தில் நூர்முகம்மது ஹ{ஸைறா(55) மற்றும் அவரது திருமணமாகிய மகளான முகம்மது யூசுப் ஜெனீறா(32) ஆகிய இருவரும் அவர்களின் வீட்டில் கொலை செய்யப்பட்ட சம்பவமானது முழு ஏறாவூரையுமே சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

இந்த சம்பவம் ஏறாவூரை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளதுடன் பெரும் அச்சத்தையும் தோற்றுவித்துள்ளது. இந்த சம்பவத்தின் சூத்திரதாரிகளை பொலிசார் கைது செய்து சட்டத்தின் முன் நிறுத்துவதுடன் விசாரணையை பாதுகாப்புத்தரப்பினர் துரிதப்படுத்த வேண்டும்.

மிகவும் நல்லொழுக்கமும் சிறந்த குணஇயல்புகளையும் கொண்ட மிகவும் அப்பாவிகளான இந்த தாயும் மகளும் கொலை செய்யப்பட்ட சம்பவமானது பெண்கள் மீதான பாதுகாப்பு தொடர்பிலும் கேள்வி யெழும்பியுள்ளது.

இந்தக் கொலைச்சம்பவமானது அனைவருக்கும் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளதுடன் பெரும் கவலையையும் ஏற்படுத்தியுள்ளது.

குடும்பத்தை பிரிந்து மத்திய கிழக்கு நாடுகளுக்கு தொழில்களுக்காக சென்றுள்ளவர்களின் குடும்பங்களின் மத்தியிலும் மற்றும் தொழில்களுக்காக வெளியூர்களுக்கு சென்றுள்ளவர்களின் குடும்பங்கள் மத்தியிலும் இன்னும் பாரிய அச்சத்தினை இந்தச் சம்பவம் தோற்று வித்துள்ளது.

பாதுகாப்பு தரப்பினர் இந்தக் கொலையை செய்தவர்களை உடனடியாக கண்டு பிடித்து அவர்களை கைது செய்து சட்டத்தின் முன் நிறுத்தி அவர்களுக்கு உரிய தண்டனை வழக்கப்படல் வேண்டும்.

இவ்வாறான சம்பவங்களில் ஈடுபடுகின்றவர்களுக்கு விரைவாக தண்டனைகள் வழங்கப்படும் போது இவ்வாறான குற்றச் செயல்கள் இடம் பெறுவதை தடுக்க முடியும் என அவர் மேலும் தெரிவித்தார்.

LEAVE A REPLY