ஹிரா பௌண்டேஷன் அனுசரணையில் பொலன்னறுவையில் வீட்டுத் திட்டம்: இராஜாங்க அமைச்சர் ஹிஸ்புல்லாஹ் விஜயம்

0
205

11ஸ்ரீலங்கா ஹிரா பௌண்டேஷன் அனுசரணையில் பொலன்னறுவை சுங்காவில் பிரதேசத்தில் அமைக்கப்பட்டு வரும் மாபெரும் வீட்டுத் திட்டப் பணியினை அவ்வமைப்பின் தலைவரும், புனர்வாழ்வு மற்றும் மீள்குடியேற்ற இராஜாங்க அமைச்சருமான எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் இன்று (14) புதன்கிழமை நேரில் சென்று பார்வையிட்டார்.

மிக நீண்டகாலமாக குடிசைகளில் வாழும் தெரிவு செய்யப்பட்ட 50 குடும்பங்களுக்கு முதற்கட்டமாக 50 வீடுகள் அமைத்துக் கொடுக்கப்படவுள்ளது.

இத்திட்டத்தை இன்று நேரடியாக விஜயம் செய்து பார்வையிட்ட இராஜாங்க அமைச்சர் ஹிஸ்புல்லாஹ், வீட்டுத் திட்டத்துடன் அவர்களது அத்தியவசியத் தேவையான குடிநீர் வசதியைப் பெற்றுக் கொடுக்கவும் பணிப்புரை வழங்கினார். இதற்கான செலவீனங்களையும் ஸ்ரீலங்கா ஹிரா பௌண்டேஷன் பொறுப்பேற்றுள்ளது.

இந் நிகழ்வில் ஹிரா பௌண்டேசன் செயளாளர் நாயகம் மும்தாஸ் மதனி, முன்னால் நகரசபை உறுப்பினர் ரஊப் ஏ. மஜீட், சிறிலங்கா சுதந்திரகட்சியின் மட்டக்களப்பு மாவாட்ட அமைப்பாளர் பஸீர் ஹாஜியார் மற்றும் ஹிரா பௌண்டேசனின் கட்டிட நிர்மான பொறுப்பாளர் நவ்ஷாட் உட்பட பலரும் கலந்து கொண்டனர்.

இந்த வீட்டுத்திட்டம் விரைவில் கட்டி முடிக்கப்படவுள்ளதுடன், இந்த வீடுக்களை கையளிக்கும் நிகழ்வில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கலந்து கொள்ளவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

1111111 11111111 111111111 1111111111

LEAVE A REPLY