18 இலட்சம் பேரே இம்­முறை ஹஜ் யாத்­தி­ரையில் பங்­கேற்பு

0
186

hajjjjj1இவ்­வ­ரு­டத்­துக்­கான புனித ஹஜ் யாத்­திரை நிறை­வுக்கு வந்­துள்ள நிலையில், 18 இலட்­சத்து 60 ஆயிரம் பேரே இம்­முறை யாத்­தி­ரையில் பங்­கேற்­ற­தாக சவூதி அதி­கா­ரிகள் தெரி­வித்­துள்­ளனர்.

இவர்­களில் 13 இலட்சம் பேர் வெ ளிநா­டு­களைச் சேர்ந்­த­வர்கள் என்றும் 5 இலட்சம் பேர் சவூதி அரே­பி­யாவில் வசிப்­ப­வர்கள் என்றும் புள்­ளி­வி­ப­ரங்கள் கூறு­கின்­றன.

சில வரு­டங்­க­ளுக்கு முன்னர் வரை 30 இலட்சம் பேர்­வ­ரையில் ஹஜ் யாத்­தி­ரையில் பங்­கேற்­றி­ருந்த போதிலும் இம்­முறை இந்த எண்­ணிக்­கை 18 இலட்­ச­மாக குறை­வ­டைந்­துள்­ள­தா­கவும் தெரி­விக்­கப்­ப­டு­கி­றது.

குறை­வ­டைந்­துள்­ள­தாக ஹஜ் மற்றும் உம்­ரா­வுக்­கான தேசிய கமிட்­டியின் தலைவர் மர்வான் அப்பாஸ் ஷாபான் குறிப்­பிட்­டுள்ளார். இதன்­கா­ர­ண­மாக ஹஜ் யாத்­தி­ரை­யுடன் தொடர்­பு­டைய வியா­பார நட­வ­டிக்­கை­க­ளிலும் 50 வீத வீழ்ச்சி ஏற்­பட்­டுள்­ள­தாக அவர் மேலும் சுட்­டிக்­காட்­டி­யுள்ளார்.

சவூ­தியில் தற்­ச­மயம் முன்­னெ­டுக்­கப்­பட்டு வரும் பாரிய அபி­வி­ருத்திப் பணிகள் கார­ண­மாக யாத்­தி­ரி­கர்­களை மட்­டுப்­ப­டுத்த வேண்­டிய தேவை ஏற்­பட்­ட­தாகக் குறிப்­பிட்­டுள்ள அவர், உலக பொரு­ளா­தார நிலை மற்றும் மத்­திய கிழக்கின் பல நாடு­களில் நிலவும் மோதல்­களும் யாத்­தி­ரி­கர்­களின் வீழ்ச்­சிக்கு காரணம் எனவும் சுட்­டிக்­காட்­டி­யுள்ளார்.

இருப்­பினும் அபி­வி­ருத்திப் பணிகள் நிறை­வு­பெறும் பட்­சத்தில், 2020 ஆம் ஆண்டில் 37 இலட்சம் யாத்திரிகர்களையும் 2042 ஆம் ஆண்டில் 67 இலட்சம் யாத்திரிகர்களையும் அனுமதிக்க முடியும் என்றும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

Source: Vidivelli

LEAVE A REPLY