கையடக்கத் தொலைபேசியினால் காப்பற்றப்பட்ட தென் ஆபிரிக்க வர்த்தகர்

0
343

(எம்.ஐ.அப்துல் நஸார்)

383c4f1500000578-3785719-image-a-118_1473695493530கொள்ளையன் ஒருவனால் நெஞ்சுப் பகுதியில் சுடப்பட்ட தென் ஆபிரிக்க வர்த்தகர் ஒருவர் தனது கையடக்கத் தொலைபேசியில் துப்பாக்கி ரவை பட்டுத் தெறித்ததால் உயிர்காப்பாற்றப்பட்டுள்ளார்.

சிறாஜ் ஆப்ரஹாம் என்ற 41 வயது வர்த்தகர் தென் ஆபிரிக்காவின் கேப் டவுனில் அமைந்துள்ள தனது வீட்டின் அருகில் தனது காரிரை நிறுத்த முனைந்தபோது அங்கு பதுங்கியிருந்த இரண்டு முகமூடியணிந்த கொள்ளையர்கள் அவரை அவரது வாகனத்திலிருந்து வெளியே இழுக்க முனைந்தனர்.

383c4f0d00000578-3785719-image-a-115_1473695452119அவ் வேளையில் நடைபெற்ற இழுபறியின்போது ஆப்ரஹாமின் நெஞ்சுக்கு மிக அருகில் வைத்து கொள்ளையன் ஒருவன் துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டுள்ளான்.

இதன்போது துப்பாக்கி ரவை அவரது சட்டைப் பையில் வைக்கப்பட்டிருந்த நவீன ரக ஸ்மாட் கையடக்கத் தொலைபேசியில் பட்டுத் தெறித்தது. ஆப்ரஹாமுக்கு எவ்வித காயமும் ஏற்படவில்லை. இறுதியில் கொள்ளையர்கள் 15 பவுண்களை மாத்திரம் கொள்ளையிட்டுக் கொண்டு ஒடுடிவிட்டனர்.

383c4ee900000578-3785719-despite_the_phone_saving_mr_abrahams_life_-a-129_1473696521568தான் ஆச்சரியப்படத்தக்க வகையில் உயர் பிழைத்தமைபற்றி அனைவரிடமும் சிலாகித்தக் கூறுவதோடு அவரது நெஞ்சுப் பகுதியில் காணப்படும் சிறிய சிராய்ப்பினையும் தனது ஆடையில் குண்டு துளைத்த அடையாளத்தையும் காண்பிக்கிறார் ஆப்ரஹாம்.

ஐந்து பிள்ளைகளின் தந்தையான ஆப்ரஹாம், அன்றைய தினம் பிறந்த நாள் நிகழ்வொன்றில் பங்கேற்ற பின்னர் வீட்டுக்குத் திரும்பினார். வீட்டுக்கு அருகில் வந்ததும் மின்சாரக் கதவு திறக்கும் வரை காத்திருந்தார். திடீரென அடையாளம் தெரியாத இருவர் அவரைத் தக்கியதோடு வாகனத்திலிருந்து அவரை வெளியே இழுத்தெடுக்கவும் முயற்சித்தனர்.

ஆனால் ஆப்ரஹாம் அவர்களிடம் போராடுவது எனத் தீர்மானித்து அவர்களோடு சண்டையில் ஈடுபட்டார். இந்த வேளையிலேயே துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் இடம்பெற்றது.

383c4ee500000578-3785719-image-a-116_1473695461736நான் சுடப்படுவதை உண்மையிலேயே நான் அவதானிக்கவில்லை. முதலாம் நபர் வாகனத்தின் கதவினை இழுத்துத் திறந்து என்னை வெளியே இழுத்தான், அப்போதுதான் போராட்டம் ஆரம்பித்தது என தென்னாபிரிக்க செய்தித்தாளான டெயிலி வொயிஸுக்குத் தெரிவித்தார்.

போராட்டம் நடைபெற்றுக் கொண்டிருக்கும் போது சுமார் இரண்டு மீற்றர் தூரத்தில் நின்றுகொண்டிருந்த இரண்டாமவன் என் மீது துப்பாக்கிப் பிரயோகம் செய்தான்.

நண்பி ஒருவரின் வீட்டுக்குச் சென்று திரும்பிக்கொண்டிருந்த ஆப்ரஹாமின் 16 வயது மகள் காருக்கு வெளியே நடைபாதையில் தனது தந்தை விழுந்து கிடப்பதைக் காண்கிறாள்.

‘நான் எழுந்தபோது எனக்கு நெஞ்சு முழுவதும் இரத்தம் வழிந்தால் எவ்வாறு எரிவு ஏற்படுமோ அவ்வாறனதொரு எரிவு ஏற்பட்டது’ என அவர் மேலும் தெரிவித்தார்.
41 வயதான ஆப்ரஹாம் உடனடியாக வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டதோடு, அங்கு அவருக்கு ஈ.சீ.ஜீ. பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.

அந்த அறிக்கையின் படி ஆப்ரஹாம் சுடப்பட்டதன் பின்னர் ஒரு சில வினாடிகள் அவரது இதயத் துடிப்பு நின்றுபோய் இருந்தமை கண்டு பிடிக்கப்பட்டது.
‘இறைவன் அருளால்தான் எனது கணவர் உயிர் பிழைத்துள்ளார் என 41 வயதான ஆப்ரஹாமின் மனைவி’ ஷமீலா தெரிவித்தார்.

சம்பவம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும், சந்தேக நபர்கள் இருவரும் இதுவரை கைது செய்யப்படவில்லை எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.

‘அல்லாஹ்வே மிகப் பெரியவன், ஏனெனில் இது அவனது நாட்டத்தில் உள்ள விடயம். அவனது நாட்டப்படியே இது நடந்திருக்கின்றது’ எனவும் ஷமீலா தெரிவித்தார்.

ஈ.சீ.ஜீ. பரிசோதனை அறிக்கை எமக்குக் கிடைத்தது. சம்பவம் நடைபெற்று சில வினாடிகள் இதயத்துடிப்பு நின்றிருந்ததை அவதானித்தோம்.
இதனிடையே பழுதடைந்த ஸ்மாட் கையடக்கத் தொலைபேசிக்குப் பதிலாக குறித்த ஸ்மாட் கையடக்கத் தொலைபேசி நிறுவனம் அவருக்கு அதே வகையான புத்தம் புதிய ஸ்மாட் கையடக்கத் தொலைபேசி ஒன்றினை அன்பளிப்பாக வழங்கியுள்ளது.

சில ஆண்டுகளுக்கு முன்னர் ஆபிரிக்காவில் இதேபோன்றதொரு சம்பவம் நடந்தது. ஆய்வாளர் ஒருவர் தனது களப் பணிகளில் ஈடுபட்டிருந்தபோது துப்பாக்கி ரவை கையடக்கத் தொலைபேசியினுள் சிக்குண்டிருந்தது என உப சஹாரா ஆபிரிக்க சந்தைப்படுத்தல் பணிப்பாளர் ஹவா ஹயாத் தெரிவித்தார்.

“நாம் முதன் முதலாக சிராஜின் கதையினை நைஜீரிய அலுவலகத்தில் இருக்கும்போது தெரிந்து கொண்டோம். பின்னர் இந்தக் கதை கென்யாவுக்கு அறிவிக்கப்பட்டு தற்போது அந்தக் கதை சீனாவுக்குச் சென்று சேர்ந்துள்ளது” எனவும் ஹவா ஹயாத் தெரிவித்தார்.

LEAVE A REPLY