ஷானுக ரத்வத்த உள்ளிட்ட ஐவர் கைது

0
87

Arrested44அரச நிதியை மோசடி செய்த குற்றச்சாட்டு தொடர்பில் முன்னாள் பாதுகாப்பு அமைச்சர் அநுருத்த ரத்தவத்வின் மகன் ஷானுக ரத்வத்த உட்பட ஐவர், நிதிக் குற்றப் புலனாய்வு பிரிவினரால் இன்று(14) கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

குறித்த ஐவரும் இன்று கோட்டை நிதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளனர். சானுக்க ரத்வத்தே, பாராளுமன்ற உறுப்பினர் லொஹான் ரத்வத்தேவின் சகோதரராவார். சானுக்க ரத்வத்தே, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் ஆட்சிக்காலத்தில் அரச நிதியை தவறாக கையாண்டதாக குற்றம் சுமத்தப்படுகிறது.

லொஹான் ரத்வத்தே முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவிற்கு ஆதரவு வழங்கி வரும் கூட்டு எதிர்க்கட்சியின் அங்கம் வகிப்பதுடன், மகிந்தவுக்கு மிகவும் நெருக்கமானவராகவும் இருந்து வருகிறார்.

லொஹான் ரத்வத்தேவின் தந்தையான அனுருத்த ரத்வத்தே, முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்கவின் தாயரான முன்னாள் பிரதமர் சிறிமாவோ பண்டாரநாயக்கவின் சகோதரர் என்பது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY