திரும்பப்பெறப்பட்ட சாம்சங் கேலக்ஸி நோட் 7ல் திருத்தம்

0
93

_91176321_16091018_3008936gஉலகின் மிகப்பெரிய ஸ்மார்ட்போன் தயாரிப்பு நிறுவனமான சாம்சங், அடுத்த வாரத்திலிருந்து தென் கொரிய வாடிக்கையாளர்கள் அதன் சமீபத்திய சாதனத்தை பயன்படுத்த முடியும் என தெரிவித்துள்ளது.

டஜன் கணக்கான சாம்சங் தயாரிப்பு கேலக்ஸி நோட் 7 அலைபேசிகள், தீப்படித்து அல்லது வெடித்து சிதறிய பிறகு திரும்ப்பப் பெறப்பட்டது.

ஒரு புதிய மென்பொருள், அலைபேசிகளின் பாட்டரிகள் 60 சதவீதம் வரை மட்டுமே நிறைவடையச் செய்து அதை அதிக வெப்பமடைவதிலிருந்து தடுக்கிறது என தென் கொரிய ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

இந்த மாற்றம் உலகம் முழுவதும் எப்போது அமல்படுத்தப்படும் என்பது தெளிவாக தெரியவில்லை.

-BBC-

LEAVE A REPLY