வெஸ்ட்இண்டீஸ் கிரிக்கெட் அணி பயிற்சியாளர் நீக்கம்

0
162

201609141200204511_phil-simmons-sacked-as-west-indies-coach_secvpfவெஸ்ட்இண்டீஸ் கிரிக்கெட் அணியின் பயிற்சியாளராக பிலிப் சிம்மான்ஸ் பணியாற்றி வந்தார். அவரை நேற்று அப்பதவியில் இருந்து வெஸ்ட்இண்டீஸ் கிரிக்கெட் வாரியம் விடுவித்துள்ளது. அணியில் புதிய அணுகுமுறை புகுத்த வேண்டும் என்று மேற்கொள் காட்டி இந்த முடிவு எடுக்கப்பட்டதாக கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது. மேலும் பிலிப் சிம்மான்ஸ் அளித்த பங்களிப்புக்கும் நன்றியும் தெரிவித்து இருக்கிறது.

சமீபலத்தில் நடந்த இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரை வெஸ்ட்இண்டீஸ் அதன் சொந்த மண்ணில் இழந்தது என்பது குறிப்பிடத்தக்கது. சிம்மான்ஸ் பயிற்சியின் கீழ் வெஸ்ட்இண்டீஸ் அணி ஏப்ரல் மாதம் நடந்த 20 ஓவர் உலககோப்பையில் சாம்பியன் பட்டம் வென்று இருந்தது.

-MM-

LEAVE A REPLY