கிராமங்களுக்குள் ஊடுருவி அச்சுறுத்தி வந்த காட்டு யானை வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகளால் மடக்கிப் பிடிப்பு

0
277

(ஏ.எச்.ஏ. ஹுஸைன்)

3மட்டக்களப்பு வவுணதீவுப் பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள சிப்பிமடு கிராமத்தை அண்டிய பகுதிகளுக்குள் உள்நுழைந்து கடந்த ஒரு வாரகாலமாக கிராம மக்களுக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தி வந்த தனியன் காட்டுயானை நேற்று (13) செவ்வாய்க்கிழமை மாலை வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகளால் மடக்கிப் பிடிக்கப்பட்டது.

30 வயது மதிக்கத் தக்க அந்த யானையைப் பிடிக்க வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகள் கடந்த ஒரு வாரகாலமாக இரவு பகலென்று பாராது பகீரதப் பிரயத்தனம் மேற்கொண்டிருந்தனர்.

இந்தக் காட்டு யானை ஏற்கெனவேயும் காடுகளை அண்டியுள்ள கிராமங்களுக்குள்ளும் நகரத்தை அண்டிய ஏறாவூர், செங்கலடி போன்ற பிரதேசங்களக்குள்ளும் நுழைந்து ஆட்களைத் தாக்கிக் கொன்றுள்ளதாக கிராம வாசிகள் தெரிவிக்கின்றனர்.

01அத்துடன் பயிர்களை துவம்சம் செய்து வந்துள்ளதோடு கிராம மக்களது வீடுகளையும், வயல் நிலங்களையும், கிணறு குளக்கட்டுக்கள் வீதிகள் என்பனவற்றையும் சேதப்படுத்தி வந்துள்ளது.

வன ஜீவராசிகள் திணைக்களத்தின் மிருக வைத்திய நிபுணர் பி. தேவசுரேந்திர, மிருக வைத்தியர்களான கீத்சிறி மேவின், டபிள்யூ. சமன் குமார உட்பட 21 பேர் கொண்ட வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகள் இந்த யானையை மயக்க ஊசி செலுத்தி மயங்கச் செய்து மடக்கிப் பிடிப்பதில் ஈடுபட்டிருந்தனர்.

பிடிக்கப்பட்ட இந்த காட்டு யானையை அநுராதபுரத்திலுள்ள வன இலாகாவுக்கு கொண்டுசெல்லும் நடவடிக்கையினை மேற்கொண்டுவருவதாக மட்டக்களப்பு மாவட்ட வன ஜீவராசிகள் சுற்றுவட்ட உத்தியோகத்தர் என். சுரேஸ்குமார் தெரிவித்தார்.

2 7

LEAVE A REPLY