குளிக்கச்சென்றவரை முதலை கடித்தது: மூதூர்- தங்கநகர் பகுதியில் சம்பவம்

0
195

(அப்துல் சலாம் யாசீம்)

crocodile-open-mouthமூதூர் பிரதேச செயலாளர் பிரிவுக்குற்பட்ட தங்கநகர் பகுதியில் மாடுகளை மேய்த்து விட்டு கிளிவெட்டி குளத்திற்கு குளிக்கச்சென்ற நபரொருவர் முதலைக்கடிக்கு இலக்காகிய நிலையில் நேற்றிரவு (13) திருகோணமலை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இவ்வாறு முதலைக்கடிக்கு இலக்கானவர் கிளிவெட்டி-தங்கநகர் பகுதியைச்சேர்ந்த ஜந்து பிள்ளைகளின் தந்தையான சிவப்பிரகாஷம் தர்மலிங்கம் (52 வயது) எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.

சம்பவம் குறித்து தெரியவருவதாவது-கூலிக்காக மாடுகளை மேய்த்து வரும் ஜந்து பிள்ளைகளின் தந்தையான இவர் வழமைபோல மாடுகளை மேய்த்து விட்டு தனிமையாக குளித்துக்கொண்டிருக்கும் போது முதலை கடித்ததாகவும் அவர் கதறியமையினால் பக்கத்து வயல் காரர்களினால் மீட்கப்பட்டு மூதூர் தள வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதையடுத்து திருகோணமலை பொது வைத்தியசாலைக்கு மேலதிக சிகிச்சைக்காக இடமாற்றப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

LEAVE A REPLY