நல்லாட்சிக்கான தேசிய முன்னணியுடன் ஒற்றுமைப்பட ஆயத்தமாகவுள்ளேன்: எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ்

0
229

hizbullah aa(விசேட நிருபர் )

நல்லாட்சிக்கான தேசிய முன்னணியுடன் ஒற்றுமைப்பட ஆயத்தமாகவுள்ளேன் என மீள்குடியேற்ற புனர்வாழ்வு புனரமைப்புஇராஜாங்க அமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் தெரிவித்தார்.

இன்று காத்தான்குடியிலுள்ள மட்டக்களப்பு பல்கலைக்கழக கல்லூரி மண்டபத்தில் இன்று (13) செவ்வாய்க்கிழமை அவர் நடாத்திய ஊடகவியலாளர் சந்திப்பிபோதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

இங்கு தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர்,

“நாங்கள் ஒற்றுமையுடன் செயற்பட வேண்டும். நாங்கள் முஸ்லிம்கள் தொடர்ச்சியாக பிளவுபடக் கூடாது என்பதிலே நான் மிகத்தெளிவாக இருக்கின்றேன்.

கடந்த மாகாண சபை தேர்தலில் உண்மையிலேயே பொறியியலாளர் அப்துர் ரஹ்மான் அவர்களைத்தான் வேட்பாளராக நிறுத்தி மாகாண சபை உறுப்பினராக ஆக்கிய அவரிடத்தில் இந்த பொறுப்புக்களை ஒப்படைத்து விட்டு நான் தேசிய மட்டத்திலே பணிகளை செய்ய வேண்டும் என நினைத்தேன்.

அல்லாஹ்வுடைய நாட்டம் அவர் அதை ஏற்றுக் கொள்ளவில்லை. பின்னர்தான் பொறியியலாளர் சிப்லி பாறூக் அவர்களை கொண்டு வந்து அவரை நிறுத்தி மாகாண சபை உறுப்பினராக்கினோம்.

அவரிடம் முழுப் பொறுப்பையும் ஒப்டைத்தேன். ஆனால் ஒரு கட்டத்துடன் அவர் வீட்டுக்கு போவதற்கு அல்லாஹ் நாடிவிட்டான்.

எனக்கும் நல்லாட்சிக்கான தேசிய முன்னணிக்குமிடையில் ஒற்றுமை ஏற்பட வேண்டுமென பல சகோதரர்கள் விரும்பபுகின்றார்கள். நானும் அதற்கு இனங்கியுள்ளேன்.

ஏதாவது ஒரு ஒற்றுமைப்பாடு ஏற்படும் போது நானும் ஒற்றுமைப்பட்டு செயற்படுவதற்கு ஆயத்தமாக இருக்கின்றேன்.

அரசியல் என்பது இன்று நான் இருப்பேன் நாளை போய் விடுவேன். மக்கள் மத்தியில் ஒற்றுமை எற்பட வேண்டும் என்பதில் தெளிவாக இருக்கின்றேன்.

ஒற்றுமைக்கான முயற்சிகள் இடம்பெறும் போது அதற்கான முழு ஒத்துழைப்பையும் வழங்க ஆயத்தமாக உள்ளேன்.

எனது மகனை அரசியலுக்கு கொண்டு வரமாட்டேன். அதற்கான எண்ணம் எனக்கு கிடையாது.

மட்டக்களப்பு அரசியலுக்கு கொண்டு வந்து மட்டக்களப்பு அரசியலில் எனது மகனை ஈடுபடுத்துகின்ற எண்ணம் எனக்கும் கிடையாது. எனது குடும்பத்திற்கும் கிடையாது.

அல்லாஹ்வுடைய நாட்டம் எப்படியென தெரியாது. ஆனால் என்னையும் எனது குடும்பத்தையும் பொறுத்தவரையில் எனது மகனை அரசியலுக்கு கொண்டு வரும் எண்ணம் கிடையாது. அவருக்கும் இந்த மட்டக்களப்பு அரசியலுக்கு வரும் எண்ணமில்லை.

என்னுடன் எனது அரசியல் நின்று விட வேண்டும் என்பதுதான் என்னுடைய விருப்பம். எனக்கு மகனை கொண்டு வந்து அரசியலில் நிறுத்த வேண்டுமென்ற எண்ணமில்லை.

அப்படியானால் கடந்த மாகாண சபை தேர்தலுக்கு கொண்டு வந்து இறக்கியிருப்பேன். அவ்வாறு செய்யவில்லை.

கடந்த மாகாண சபை தேர்தலில் எனது மகனை நிறுத்த வேண்டும் என்று பசீர் ஹாஜியார் தலைமையில் வந்து என்னிடம் வற்புறுத்தினார்கள். நான் அதை விரும்பவில்லை.

எமது ஹிறா பவுண்டேசன் நடைமுறைப்படுத்தி வரும் 55 வயதுக்கு மேற்பட்ட பள்ளிவாயலகளில் கடமையாற்றும் இமாம்கள் மற்றும் முஅத்தீன்களுக்கான இலவச உம்றா திட்டத்திக் கீழ் இதுவரை நாடு பூராவும் 300 பேர் இலசவமாக உம்றாவை முடித்துள்ளனர்.

அந்த வகையில் புனித ரமழான் மாதத்தில் இது இடை நிறுத்தப்பட்டிருந்தது. பின்னர் ஹஜ் முடிந்தவுடன் இன்னும் ஒன்றரை மாதத்தில் இந்த உம்றாத்திட்டம் மீண்டும் ஆரம்பிக்கப்படவுள்ளது.

இத்திட்டத்தில் மிகுதியாக உள்ள 200 பேரை உம்றாவுக்காக புனித மக்காவுக்கு அனுப்பும் பணியினை ஆரம்பித்துள்ளோம்.

அதற்காக தகுதியான 100 பேரின் விண்ணப்பங்கள் மாத்திரமே கையிலுள்ளன.

அந்த வகையில் இன்னும் 100 பேர் தேவைப்படுகின்றனர். அதற்காக இலங்கையிலுள்ள அரபுக்கல்லூரிகளில் விரிவுரையாளர்களாக, ஆசிரியர்களாக கடமையாற்றும் 55 வயதுக்கு மேற்பட்ட இதுவரை உம்றாவுக்கு செல்லாத ஆண்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம்.

இவர்களை உடனடியாக விண்ணப்பிக்குமாறு கேட்டுக் கொள்கின்றேன்” என்றார்.

இந்த ஊடகவியலாளர் சந்திப்பில் ஹிறா பவுண்டேசன் நிறுவனத்தின் பொதுச் செயலாளர் மௌலவி ஏ.ல்.மும்தாஸ் மதனீ மற்றும் மட்டக்களப்பு பல்கலைக்கழக கல்லூரியின் பணிப்பாளர் எம்.அமீர், முஸ்லிம் சமய கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் கிழக்கு மாகாண அலுவலக அதிகாரி ஏ.எல்.ஜுனைட் நழீமி ஆகியோரும் கலந்து கொண்டனர்.

LEAVE A REPLY