தரம் குறைந்த ஆளி மற்றும் செருகிகள் விற்பனைக்கு தடை

0
136

unnamed__9_-1அரசாங்கத்தினால் ஆளி(சுவிச்) மற்றும் செருகிகளுக்கு (சொக்கெட்) புதிய பொது நியமத்தினடிப்படையில் கொள்வனவு நடைமுறையை அறிமுகப்படுத்தியுள்ளது. அறிமுகப்படுத்தப்பட்ட தரத்தை விட குறைவான தரத்தினை உடைய ஆளி(சுவிச்) மற்றும் செருகிகளுக்கு (சொக்கெட்) 2018 ஆகஸ்ட் 16 திகதி முதல் இறக்குமதி மற்றும் விற்பனை செய்ய தடை செய்யப்படவுள்ளதாக பொதுப்பயன்பாட்டு ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

மேலும் தற்போது நடைமுறையிலுள்ள ஆளி(சுவிச்) மற்றும் செருகிகளுக்கு (சொக்கெட்) முறையான நியமங்களோ பாதுகாப்பு நடைமுறைகளோ பயன்படுத்தப்படாமையினாலேயே மின்சாரத்தினால் அதிக விபத்துக்களும் இறப்புக்களும் கடந்த காலங்களில் பதிவானதாகவும் இதனை தடுக்கவே இந்நடைமுறையை கொண்டு வரவுள்ளதாக அவ் ஆணைக்குழவின் பணிப்பாளர் ஜெனரல் தமித்த குமாரசிங்க தெரிவித்தார்.

அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று இடம்பெற்ற ஊடகவியளாளர் மாநாட்டில் கலந்துக்கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு கருத்து தெரிவித்தார்.

-VK-

LEAVE A REPLY