சுவையான சத்தான ஓட்ஸ் வெஜிடபிள் உப்புமா

0
233

201609130741560295_nutritious-and-tasty-vegetable-oats-upma_secvpfதேவையான பொருட்கள் :

கேரட் – 1 கப்
குடமிளகாய் – 1 கப்
பச்சை பட்டாணி – 1 கப்
பீன்ஸ் – 1 கப்
காலி பிளவர் – 1 கப்
வெங்காயம் – 2
ஓட்ஸ் – 1 கப்
எண்ணெய் – 2 டீஸ்பூன்
பச்சைமிளகாய் – 2
உப்பு – தேவையான அளவு
கறிவேப்பிலை – சிறிதளவு
கடுகு – சிறிதளவு

செய்முறை :

* வெங்காயம், ப.மிளகாயை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

காய்கறிகளை பொடியாக நறுக்கி சிறிது உப்பு சேர்த்து வேகவைத்து கொள்ளவும்.

* வழக்கமாக உப்புமாவுக்கு தண்ணீர் விட்டு செய்வது போல் ஓட்ஸ் உப்புமாவுக்கு தண்ணீர் விட்டு வேக வைக்க வேண்டியதில்லை. ஒரு பெரிய டீ வடிகட்டி அல்லது சல்லடையில் ஓட்ஸைப் போட்டு அதைத் தண்ணீர் பைப்பின் அடியில் வைத்து, தண்ணீர் விட்டு லேசாக அலசி விட்டுப் போட்டாலே ஓட்ஸ் சாஃப்ட்டாகி விடும்!

* கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு, கறிவேப்பிலை தாளித்த வெங்காயம், ப.மிளகாய் போட்டு நன்றாக வதக்கிய பின்னர் காய்கறிகளை போட்டு வதக்கவும்.

* கடைசியாக அதில் நனைந்த ஓட்ஸைப் போட்டு உப்பு தூள் சேர்த்து பிரட்டி இறக்கவும்.

* சுவையான சத்தான ஓட்ஸ் வெஜிடபிள் உப்புமா ரெடி.

LEAVE A REPLY