வற் வரியை அதிகரிக்காது சிகரட்டிற்கு 20 ரூபா வரியை அதிகரியுங்கள் : பந்துல

0
88

bandula_gunawardenaவற் வரியை அதிகரிக்காது சிகரட்டிற்கு 20 ரூபா வரியை அதிகரித்தால் அரசாங்கத்திற்கு 82 பில்லியன் ரூபாவுக்கும் அதிக இலாபம் கிடைக்க வாய்ப்புள்ளதாக, பாராளுமன்ற உறுப்பினர் பந்துல குணவர்த்தன தெரிவித்துள்ளார்.

பத்தரமுல்லை நெலும் மாவத்தையில் அமைந்துள்ள மஹிந்த ராஜபக்ஷவின் அலுவலகத்தில் இன்று இடம்பெற்ற கூட்டு எதிர் கட்சியின் செய்தியாளர் மாநாட்டிலேயே மேற்கண்டவாறு அவர் தெரிவித்தார்.

சிகரெட்டுக்கான வரியை அதிகரிப்பதற்கு எதிராக சிலர் செயற்பட்டு வருவதாக ஜனாதிபதி தெரிவித்துள்ளதாக கூறிய பந்துல குணவர்த்தன, ஜனாதிபதி தனது அதிகாரத்தைப் பயன்படுத்தி வர்த்தமானி அறிவித்தல் மூலம் இந்த வரியை அதிகரிக்க முடியும் எனவும் குறிப்பிட்டுள்ளார். அவ்வாறு இல்லையாயின் அதற்கு எதிராக இருக்கும் அதிகாரிகளின் பெயர் விபரங்களை ஜனாதிபதி வௌியிட முடியும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

–ET-

LEAVE A REPLY