பெங்களூர் துப்பாக்கி சூட்டில் மேலும் ஒருவர் உயிரிழப்பு

0
181

201609131546092380_cauvery-issue-another-dead-in-bengalore_secvpfபெங்களூருவில் நேற்று கன்னட அமைப்பினர் நடத்திய போராட்டத்தில் வன்முறை வெடித்தது. இந்த நிலையில், பெங்களூரு ராஜகோபால்நகர் அருகே லக்கரே சர்க்கிளில் கன்னட அமைப்பை சேர்ந்த சிலர் போராட்டத்தில் ஈடுபட்டார்கள்.

அப்போது அவர்களை கலைந்து செல்லும்படி போலீசார் கேட்டுக் கொண்டனர். ஆனால் அவர்கள் கலைந்து செல்ல மறுத்து விட்டார்கள். மேலும் லக்கரே சர்க்கிளில் நிறுத்தப்பட்டு இருந்த போலீசாரின் ரோந்து வாகனத்திற்கு போராட்டக்காரர்கள் தீவைத்தார்கள். இதில், அந்த ரோந்து வாகனம் எரிந்து நாசமானது.

இதையடுத்து, போராட்டக்காரர்கள் மீது போலீசார் துப்பாக்கியால் சுட்டார்கள். அப்போது, 3 வாலிபர்களின் உடலில் குண்டுகள் துளைத்தன. இதனால் அந்த வாலிபர்கள் ரத்த வெள்ளத்தில் சுருண்டு விழுந்தார்கள்.

உடனே அவர்களை போலீசார் மீட்டு தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவர்களுக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வந்தனர்.

சிகிச்சை பலனின்றி நேற்று உமேஷ் என்னும் வாலிபர் உயிரிழந்த நிலையில் தற்போது குமார் என்னும் வாலிபரும் உயிரிழந்துள்ளார். மற்றொரு வாலிபருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

LEAVE A REPLY