சமூகமட்ட விபத்துக்களைக் குறைப்பதற்கான திட்டத்தின் கீழ் 5 பேருக்கு பராமரிப்புக் கொடுப்பனவு

0
107

-ஏ.எச்.ஏ. ஹுஸைன்-

unnamed-1மட்டக்களப்பு மாவட்டத்தில் இடம்பெற்ற விபத்துச் சம்பவங்களின் போது படுகாயமடைந்து சிகிச்சை பெற்று வரும் 5 நோயாளிகளுக்கு அவர்களது பிற் பராமரிப்புக்கான உதவிக் கொடுப்பனவாக செவ்வாய்க்கிழமை (செப்ரெம்பெர் 13, 2016) தலா பத்தாயிரம் ரூபாய் காசோலை வழங்கப்பட்டுள்ளதாக சர்வோதய நிறுவனத்தின் சமூகமட்ட விபத்துக்களைக் குறைப்பதற்கான திட்டத்தின் வெளிக்கள உத்தியோகத்தர் ஜோசெப் ஸ்ரீயானி தெரிவித்தார்.

இதன்படி சமீப ஒரு சில நாட்களில் மட்டக்களப்பு மாவட்டத்தில் இடம்பெற்ற வீதி விபத்தில் சிக்கிய ஒருவர், மரத்தால் விழுந்து காயம்பட்ட 3 பேர், சுவர் சரிந்து விழுந்ததில் காயமடைந்த ஒருவர் என ஐவருக்கும் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் வைத்து இந்தக் கொடுப்பனவுகள் வழங்கி வைக்கப்பட்டன.

காசோலை கையளிக்கும் நிகழ்வில் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் வைத்திய அதிகாரிகள், சர்வோதய நிறுவனத்தின் கிழக்கு மாகாணப் பணிப்பாளர் ஈ.எல். அப்துல் கரீம், சமூகமட்ட விபத்துக்களைக் குறைப்பதற்கான திட்டத்தின் திட்ட முகாமையாளர் ரீ.டி. பத்ம கைலைநாதன், வெளிக்கள உத்தியோகத்தர் ஜோசெப் ஸ்ரீயானி ஆகியோருட்பட பாதிக்கப்பட்ட காயமடைந்தவர்களும் உடனிருந்தனர்.

LEAVE A REPLY