ஏறாவூர் இரட்டைப் படுகொலை: மோப்ப நாயுடன் தொடர்ந்து தேடுதல்

0
617

-ஏ.எச்.ஏ. ஹுஸைன்

unnamedஏறாவூர் இரட்டைப்; படுகொலைச் சம்பவம் தொடர்பாக விஷேட மோப்ப நாயுடன் பொலிஸ் அணியொன்று இரவு பகலாக புலனாய்வுத் தேடுதலில் ஈடுபட்டுள்ளது என பொலிஸார் தெரிவித்தனர்.

கடந்த ஞாயிறு தொடக்கம் இந்த நாயுடன் மோப்பத் தேடுதல் தொடர்ந்து இடம்பெற்று வருகின்றது. திங்கட்கிழமை மாலை ஒரு திருப்பமாக இந்த விஷேட மோப்ப நாய் ஏறாவூர் 5ஆம் குறிச்சி சந்திவரை சென்று அங்குள்ள ஒரு கடை மற்றும் புதிதாகக் கட்டுப்பட்டு வரும் கடைத்தொகுதி ஒன்றிற்குள்ளும் இந்த மோப்ப நாய் பல தடவைகள் சென்று திரும்பியது.

அத்துடன் செவ்வாய்க்கிழமையும் குறித்த அந்த இடங்களைச் சுற்றி மோப்ப நாய் வலம் வந்ததால் பொலிஸார் அது குறித்து தமது கவனத்தைச் செலுத்தியுள்ளனர்.

இதேவேளை பொதுமக்கள் தமக்குத் தெரிந்த தகவலை அநாமதேயமாகவேனும் தமக்குத் தெரிப்படுத்துமாறு பொலிஸார் கேட்டுள்ளனர். இந்த விடயத்தில் பொதுமக்கள் பார்வையாளர்களாக இருக்கக் கூடாதென்றும் பொலிஸார் வலியுறுத்தியுள்ளனர்.

கொலையின் பின்னணி பற்றி அநாமதேயக் கடிதம் மூலமும் ஏறாவூர் பொலிஸ் நிலையத்திற்குப் பொதுமக்கள் ரகசியங்களைத் தெரியப்படுத்தலாம் என்று பொலிஸார் கேட்டுள்ளனர்.

LEAVE A REPLY