மாலைநேர வகுப்பிற்குச்சென்ற இரண்டு சிறுவர்களை காணவில்லை

0
207

(அப்துல்சலாம் யாசீம்)

Missing144_0_1திருகோணமலை-கன்னியா பகுதியில் பின்னேர வகுப்பிற்குச்சென்ற இரண்டு சிறுவர்களைக்காண வில்லையென பெற்றோர்கள் நேற்றிரவு (12) உப்புவெளி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளனர்.

இவ்வாறு காணாமல் போனதாக கூறப்படும் கன்னியா-மிகிந்தபுர இலக்கம் 532 இல் வசித்து வரும் யோகராஜா துஷானா அனு (09வயது) மற்றும் எஸ்.தனுஸ்க (11வயது) ஆகியோர் தொடர்பாகவே முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

சிறுவர்கள் காணாமல் போன தொடர்பில் மூன்று பொலிஸ் குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

விசாரணைகளை உப்புவெளி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

LEAVE A REPLY