பயணிகளை ஏற்றிச்சென்ற பஸ் வீதியை விட்டு விலகி விபத்து: 11 பேர் வைத்தியசாலையில் அனுமதி

0
90

(அப்துல்சலாம் யாசீம்)

unnamed-1திருகோணமலையிலிருந்து -யாழ்ப்பாணத்திற்கு பயணிகளை ஏற்றிச்சென்ற சீடிபி பஸ் வீதியை விட்டு விலகி விபத்துக்குள்ளானதில் இன்று (13) காலை 11 பேர் திருகோணமலை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

திருகோணமலை பேருந்து நிலையத்தில் அதிகாலை 4.30மணிக்கு புறப்பட்ட பஸ் கன்னியா சோதனைச்சாவடிக்கு அருகில் வளைவில் வீதியை விட்டு விலகி குடைசாய்ந்துள்ளமையினால் இவ்விபத்து ஏற்பட்டுள்ளதாகவும் பொலிஸ் ஆரம்பகட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

விபத்து தொடர்பாக உப்புவெளி பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

LEAVE A REPLY