காத்தான்குடி பிரதேசத்தில் சிறுவர்களுக்கான ஹஜ்ஜுப் பெருநாள் பஸார் நிகழ்வு

0
124

(ஜுனைட்.எம்.பஹ்த்)

unnamed-1புனித “ஈதுல் அல்ஹா” ஹஜ்ஜுப் பெருநாள் தினத்தை சிறப்பிக்கும் வகையில் காத்தான்குடி நகர சபையின் அனுமதியுடன் புதிய காத்தான்குடி முஹைதீன் பெரிய ஜும்ஆ பள்ளிவாயல் நிருவாகத்தினால் காத்தான்குடி பிரதேசத்தில் சிறுவர்களுக்கான ஹஜ்ஜுப் பெருநாள் பஸார் நிகழ்வு இன்று (12.09.2016) திங்கட்கிழமை ஹிஸ்புல்லாஹ் விளையாட்டு மைதானத்தில் ஆரம்பமானது.

இன்று முதல் தொடர்ந்து மூன்று நாட்களுக்கு நடைபெறும் இந் நிகழ்வில் ஆண் பெண் கலப்பை தடுக்கும் நோக்கில் வயது வந்த பெண்கள் இவ் பெருநாள் பஸாருக்கு வருவது தடை செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது..

இன்று ஆரம்பமான இந் நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினரும் இராஜாங்க அமைச்சருமான கெளரவ எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் மற்றும் அரசியல் பிரமுகர்களும் கலந்து கொண்டனர்.

unnamed

LEAVE A REPLY