(Video & Photos) காவிரி பிரச்சினை: கர்நாடகாவில் வன்முறை; 90 வாகனங்களுக்கு தீ வைப்பு

0
154

bangalore-violent-2இந்தியாவின் காவிரியில் தமிழகத்திற்கு கர்நாடகா நீர் திறந்துவிட்டதை கண்டித்து பெங்ளூரூவில் வன்முறை சம்பவங்கள் தொடர்ந்து நடந்து வருகின்றன.

நயன்தரஹள்ளி பகுதியில் தமிழகத்தின் கேபிஎன் நிறுவனத்தை சேர்ந்த, ஒரே இடத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த 50 பஸ்கள் தீ வைத்து கொளுத்தப்பட்டன. பல்வேறு இடங்களில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த 27 லொரிகளும் எரிக்கப்பட்டன. மொத்மாக 90 வாகனங்கள் இதுவரை கொளுத்தப்பட்டுள்ளன.

சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டதையடுத்து காவிரியில் தமிழகத்திற்கு கர்நாடகா நீர் திறந்துவிட்டதை கண்டித்து கர்நாடகா தலைநகர் பெங்களூரூவில் இன்று வன்முறை சம்பவங்கள் நடந்து வருகிறது. தமிழக வாகனங்கள், நிறுவனங்கள மீது கன்னடர்கள் தாக்குதல் நடத்தி வருகின்றனர்.

இதனால் அங்கு சட்டம், ஒழுங்கும் சீர்கெட்டு, பதட்டம் ஏற்பட்டுள்ளது. 144 தடை உத்தரவும் பிறக்கப்பட்டுள்ளது. பாதுகாப்புக்காக பெங்களூரூ நகரில் 15 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

இந்த விவகாரம் தொடர்பாக அம்மாநில உள்துறை அமைச்சர் பரமேஸ்வரா செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி:

* சுப்ரீம் கோர்ட் தீர்ப்பை அமைதியான முறையில் கர்நாடகா மக்கள் ஏற்றுக்கொள்ள வேண்டும்.
* சுப்ரீம் கோர்ட் தீர்ப்பால் கர்நாடகாவிற்கு அநீதி இழைக்கப்பட்டுள்ளது.
* மைசூரு, மாண்டியா, ராம்நகர், சி்த்தூர்கார் ஆகிய பகுதிகளில் பதற்றமான சூழ்நி்லை ஏற்பட்டுள்ளது.
* கர்நாடகா நிலைமையை கட்டுக்குள் வைக்க போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
* கர்நாடகாவின் பொதுசொத்துக்களுக்கும், பொதுமக்களுக்கும் எந்த சேதத்தையும் ஏற்படுத்த வேண்டாம்.
* 10 சி.ஆர்.பி.எப்.படைகள், 182 கே.எஸ்.ஆர். படைகள் குவிக்கப்பட்டுள்ளன. மேலும் 10 சி.ஆர்.பி.எப்., படைகள் அனுப்ப கோரியுள்ளோம். இவ்வாறு அவர் கூறினார்.

50 தமிழக பஸ்கள் தீ வைப்பு

இதற்கிடையே, பெங்களூரூ, மைசூர் தேசிய நெடுஞ்சாலையில் நைஸ் சாலையில் உள்ள தமிழகத்தைச் சேர்ந்த கேபிஎன் நிறுவனத்திற்கு சொந்தமான பணிமனையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த தமிழக பதிவு எண் கொண்ட 50 தமிழக பஸ்கள் வன்முறை கும்பலால் தீவைத்து கொளுத்தப்பட்டுள்ளன. 8 க்கும் மேற்பட்ட வாகனங்களில் தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றன.

பெங்களூரூவில் தமிழர்களுக்கு உரிய பாதுகாப்பு அளிக்கப்பட்டும் என்று

பெங்களூரூ உதவி போலீஸ் கமிஷனர் ஹரிஹரன் கூறியுள்ளார்.

முன்னதாக கர்நாடக அமைச்சரவையின் அவசரக்கூட்டம் முதல்வர் சித்தராமையா தலைமையில் இன்று மாலை கூடியது, அப்போது சட்டம் ஒழுங்கு குறித்தும் வன்முறையை கட்டுப்படுத்துவது குறித்தும் ஆலோசனை நடந்தது.

#Dinamalar

bangalore-violent-3 bangalore-violent-1

LEAVE A REPLY