காத்தான்குடியில் பெண்களுக்கான ஹஜ்ஜுப் பெருநாள் நிகழ்வு

0
131

(விஷேட நிருபர்)

Mahathus Sunnah Ladies Arabic Collegeகாத்தான்குடியில் பெண்களுக்கான ஹஜ்ஜுப் பெருநாள் நிகழ்வொன்று எதிர்வரும் சனிக்கிழமை (17) நடைபெறவுள்ளது.

காத்தான்குடி மஹதுஸ்ஸுன்னா அந் நபவிய்யா மகளிர் அரபுக்கல்லூரியின் ஏற்பாட்டில் காத்தான்குடி ஹிஸ்புல்லாஹ் மண்டபத்தில் பெண்களுக்கான ஹஜ்ஜுப் பெருநாள் நிகழ்வு நடைபெறவுள்ளது.

அன்று பிற்பகள் 3.45 மணியிலிருந்து மாலை 6.15 மணிவரை நடைபெறவுள்ள இந்த நிகழ்வு பெண்களுக்கென தனித்துமாக நடைபெறவுள்ளது.

காத்தான்குடி மஹதுஸ்ஸுன்னா அந் நபவிய்யா மகளிர் அரபுக்கல்லூரியின் உப அதிபர் மௌலவிய்யா ஏ.எல்.சில்மியா தலைமையில் நடைபெறும் இந்த நிகழ்வில் கோறளைப் பற்று மத்தி பிரதேச செயலாளர் ஜனாபா எம்.எஸ்.நிஹாறா பிரதம விருந்தினராக கலந்து கொள்ளவுள்ளார்.

இதில் பெண்களின் கலை நிகழ்வுகளும் நடைபெறுவதுடன் இந்த நிகழ்வில் பெண்கள் மாத்திரமே அனுமதிக்கப்படுவார்கள் என காத்தான்குடி மஹதுஸ்ஸுன்னா அந் நபவிய்யா மகளிர் அரபுக்கல்லூரி நிருவாகம் அறிவித்துள்ளது.

LEAVE A REPLY