வட கொரியாவை மூழ்கடித்த வெள்ளம்: 133 பேர் பலி; 395 பேரை காணவில்லை

0
134

north-korea-flooding-kills-133வடகொரியா நாட்டில் கடந்த சில தினங்களாக பலத்த மழை பெய்து வருகிறது. மழையினால் பல்வேறு இடங்களில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. தாழ்வான பகுதிகள் தண்ணீரில் மிதக்கின்றன.

வெள்ளம் காரணமாக அந்நாட்டு மக்கள் பலத்த இடர்பாடுகளுக்கு உள்ளாகியுள்ளனர். வெள்ளத்திற்கு இதுவரை 133 பேர் பலியாகியுள்ளனர். சுமார் 395 பேர் வரை காணாமல் போயுள்ளனர்.

வெள்ளத்தால் சுமார் 35,500 வீடுகள் பாதிக்கப்பட்டிருப்பதாகவும், வெள்ளம் பாதிக்கப்பட்ட பகுதிகளிலிருந்து 1,07,000 பேர் வெளியேற்றப்பட்டுள்ளனர் என்றும் மனிதநேய விவகாரங்களுக்கான ஐ.நா. அமைப்பு தெரிவித்துள்ளது.

கடந்த 70 வருடங்களில் இல்லாத பேரழிவை வடகொரியா தற்போது சந்தித்துள்ளது என்றும், மீட்புப் பணிகள் துரிதமாக நடைபெற்று வருவதாகவும் உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

#News1st

LEAVE A REPLY