Whats app update : இந்த அம்சங்கள் பற்றி உங்களுக்குத் தெரியுமா.??

0
83

400x400_mimagee22f55d594386d3db291604463297dfaவாட்ஸ்ஆப் இல்லாத ஸ்மார்ட்போன்களே இல்லை, இதோடு பெரும்பாலானோர் வாட்ஸ்ஆப் மட்டும் பயன்படுத்த மட்டுமே ஸ்மார்ட்போன்களை வாங்குகின்றனர். 2009 ஆம் ஆண்டு வெளியான குறுந்தகவல் செயலியான வாட்ஸ்ஆப் உலகம் முழுக்க அதிகம் பயன்படுத்தப்படும் செயலியாகவும் இருக்கின்றது.

இந்த ஆண்டின் துவக்கம் முதலே வாட்ஸ்ஆப் நிறுவனம் பல்வேறு அம்சங்களை வழங்கி வருகின்றது. இதோடு வாரம் ஒரு அப்டேட் என வாட்ஸ்ஆப் மிக வேகமாக புதிய அம்சங்களை வழங்கி வருகின்றது. அதிகம் பேர் பயன்படுத்தும் வாட்ஸ்ஆப் செயலியில் புதுப் புது அப்டேட்களின் மூலம் பல்வேறு புதிய அம்சங்கள் வழங்கப்பட்டு வருகின்றன. சீரான இடைவெளியில் செயலியினை அப்டேட் செய்யும் போது புதிய அம்சங்களைப் பற்றி தெரிந்து கொண்டு அவற்றை பயன்படுத்த முடியும்.

மிகப்பெரிய குறுந்தகவல்களை டைப் செய்வதைத் தவிர்த்து மைக் பட்டன் அழுத்தி உங்களது தகவலை குரல் மூலம் அனுப்ப முடியும்.

க்ரூப் சாட் செய்யும் போது நீங்கள் அனுப்பிய குறுந்தகவலினை யார் யார் படித்தது என்பதை அறிந்து கொள்ள குறுந்தகவலை அழுத்திப் பிடித்து இன்ஃபோ ஆப்ஷனை கிளிக் செய்ய வேண்டும். இவ்வாறு செய்த பின் குறுந்தகவல் அனுப்பப்பட்ட நேரம் முதல் அனைத்துத் தகவல்களையும் பார்க்க முடியும்.

ஒரே நேரத்தில் அதிகப்படியான குறுந்தகவல்கள் வரும் போது குறிப்பிட்ட குறுந்தகவலுக்கு மட்டும் பதில் அளிக்க முடியும். இதற்குக் குறிப்பிட்ட குறுந்தகவலை அழுத்திப் பிடித்து ‘reply’ ஆப்ஷனை தேர்வு செய்து பதில் அளிக்கலாம்.

குறிப்பிட்டவரின் சாட்களை மட்டும் ஹோம் ஸ்கிரீனில் ஷார்ட்கட் போன்று செட் செய்ய முடியும். இதற்குக் குறிப்பிட்ட காண்டாக்ட் சாட் விண்டோ சென்று செட்டிங்ஸ் — மோர் — ஆட் ஷார்ட்கட் ஆப்ஷனை தேர்வு செய்ய வேண்டும்.

உங்களது குறுந்தகவல்களுக்கு முன்பும் பின்னும் * பயன்படுத்தினால் குறிப்பிட்ட வார்த்தை போல்ட் செய்யப்படும், இதே போல் _ பயன்படுத்தினால் இட்டாலிக் ஆப்ஷனும் ~ பயன்படுத்தும் போது ஸ்ட்ரைக் கிடைக்கும்.

LEAVE A REPLY