மருத்துவ பீட மாணவனின் சடலம்; 6 பக்கங்களிலான கடிதம் கண்டுபிடிப்பு

0
169

death-bodyகொழும்பு, நொரிஸ் கெனல் வீதியிலுள்ள மருத்துவ பீட மாணவர்களுக்கான விடுதியிலிருந்து மீட்கப்பட்ட மாணவனின் சடலத்திற்கு அருகிலிருந்து 6 பக்கங்களிலான கடிதமொன்று மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குறித்த மாணவன் நோய் நிலையொன்றின் காரணமாக மருத்துவ சிகிச்சைகள் பெற்றுவந்துள்ளமை தெரியவந்துள்ளது.

மாணவன் மருந்து வகையொன்றை உட்கொண்டு உயிரிழந்திருக்கலாம் என பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.

கொழும்பு பல்கலைக்கழக மருத்துவ பீடத்தில் கல்வி பயிலும் 27 வயதுடைய மாணவனின் சடலம் நேற்று மீட்டுட்டமை குறிப்பிடத்தக்கது.

-VK–

LEAVE A REPLY