மசிடோனியா நாட்டில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 5.3 ஆக பதிவு

0
87

201609121016506655_53-quake-hits-macedonia-at-least-30-injured_secvpfமசிடோனியா நாட்டில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் வீடுகள் இடிந்ததில் 30 பேர் காயம் அடைந்தனர். ஆப்பிரிக்க நாடான மசிடோனியாவில் நேற்று மாலை 3 மணியளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. இதனால் தலைநகர் ஸ்கோப்ச் மற்றும் அதன் புற பகுதிகள் அதிர்ந்து குலுங்கின.

அதை தொடர்ந்து பீதி அடைந்த மக்கள் வீடுகளை விட்டு வெளியேறி தெருக்களிலும், பூங்காக்களிலும் தஞ்சம் அடைந்தனர்.

நிலநடுக்கம் காரணமாக வீடுகள் மற்றும் கட்டிடங்களின் கூரைகள், சுவர்கள் இடிந்தன. பெரும்பாலான வீடுகளின் சுவர்களில் கீறல்கள் ஏற்பட்டன. இதனால் இடிபாடுகளில் சிக்கி 30 பேர் காயம் அடைந்தனர்.

இது தவிர பொருட்சேதம் மற்றும் உயிர் சேதம் குறித்த தகவல்கள் வெளியாகவில்லை. இதற்கிடையே அங்கு 5.3 ரிக்டரில் நில நடுக்கம் பதிவானதாக அறிவிக்கப்பட்டது.

ஸ்கோப்ச் அருகே பூமிக்கு அடியில் 10 கி.மீட்டர் ஆழத்தில் நிலநடுக்கம் உருவானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு முன்பு 1963-ம் ஆண்டு இங்கு கடுமையான நிலநடுக்கம் ஏற்பட்டது. அப்போது 1000 பேர் உயிரிழந்தனர்.

LEAVE A REPLY