ஹஜ் கற்றுத்தரும் தியாகங்கள், படிப்பினைகள், பாடங்களை நம் வாழ்வில் எடுத்து நடக்க முயற்சிப்போம்: முஸ்லிம் காங்கிரஸின் உயர்பீட உறுப்பினர் கணக்கறிஞர் எச்.எம்.எம்.றியாழ்

0
221

-வை.எம்.பைரூஸ்-

11143639_1423965764600751_36043521154536042_nஇன்று புனித ஈத்துல் அழ்ஹா ஹஜ்ஜூப் பெருநாளைக் கொண்டாடும் இலங்கை வாழ் சகோதர, சகோதரிகளுக்கும் குறிப்பாக, கல்குடா வாழ் சகோதர, சகோதரிகள், இளைஞர்கள் மற்றும் வெளிநாடு வாழ் எம் உறவுகள், குடும்பத்தினருக்காகவும் இப்பெருநாள் தியாகத் திரு நாளாக அமைய வேண்டுமென வல்ல நாயன் அல்லாஹ்வைப் பிரார்த்தனை செய்வதோடு, வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்வதாக ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் உயர்பீட உறுப்பினரும் கணக்கறிஞருமான எச்.எம்.எம்.றியாழ் அவர்கள் விடுத்துள்ள தனது ஹஜ்ஜூப் பெருநாள் வாழ்த்துச்செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.

தனது வாழ்த்துச்செய்தியில் மேலும் குறிப்பிட்டுள்ள அவர், இஸ்லாத்தின் ஐம்பெரும் கடமைகளில் ஒன்றான ஹஜ்ஜூடைய மாதத்தை அடைந்திருக்கும் நாம், அறபா நோன்பையும் நோற்று, அல்லாஹ்வின் நேசத்துக்குரிய நண்பரான நபி இப்றாஹீம் அலை அவர்களின் தியாக வாழ்க்கையை மையப்படுத்தி கடமையாக்கியுள்ள ஹஜ் கடமையையும் நிறைவேற்றி, அதனுடன் தொடர்புடைய நற்காரியங்களையும் செய்து, பெறுமதியான நன்மையைப் பெற முயற்சிக்க வேண்டும்.

இம்மாதமும் ஹஜ் கடமையும் கற்றுத்தரும் படிப்பினைகள், பாடங்களை நம் வாழ்வில் முடிந்தளவு எடுத்து நடக்க இறைவன் அருள்புரிய வேண்டுமெனப் பிரார்த்திப்பதோடு, அதற்காக நாமும் முயற்சிக்க வேண்டும்.

குறிப்பாக, பெருநாள் தினங்களில் வீணான விளையாட்டுக்களிலோ கேலி கூத்துக்களிலோ ஈடுபடாமலும், குர்பானுடை கடமைகளைச் செய்யும் விடயத்தில் இஸ்லாமிய வரையறைகளை மீறாமலும், நாட்டின் சட்டத்தை மதித்து நடப்பதுடன், அதனூடாக மாற்று மத சகோதரர்கள் மனம் புண்படும்படி நடந்து கொள்வதிலிருந்தும் நாமும் தவிர்ந்து கொள்ள வேண்டுமெனவும் கேட்டுக் கொண்டுள்ளார்.

அத்துடன், இன்று புனித ஈத்துல் அழ்ஹா ஹஜ்ஜூப் பெருநாளைக் கொண்டாடும் இலங்கை வாழ் சகோதர, சகோதரிகளுக்கும் குறிப்பாக, கல்குடா வாழ் சகோதர, சகோதரிகள், இளைஞர்கள் மற்றும் வெளிநாடு வாழ் எம் உறவுகள், குடும்பத்தினருக்காகவும் இப்பெருநாள் தியாகத் திரு நாளாக அமைய வேண்டுமென வல்ல நாயன் அல்லாஹ்வைப் பிரார்த்தனை செய்வதோடு, வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்வதாக ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் உயர்பீட உறுப்பினரும் கணக்கறிஞருமான எச்.எம்.எம்.றியாழ் அவர்கள் விடுத்துள்ள தனது ஹஜ்ஜூப் பெருநாள் வாழ்த்துச்செய்தியில் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

LEAVE A REPLY