(அப்துல் சலாம் யாசீம்)
திருகோணமலை-குச்சவெளி பொலிஸ் பிரிவிற்குற்பட்ட பகுதியில் 62 முதிரை மரக்குற்றிகளை ஏற்றிச்சென்ற குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்ட இரண்டு பேரில் ஒருவரை விளக்கமறியலில் வைக்குமாறும் மற்றைய நபரை ஒரு இலட்சம் ரூபாய் சரீர பினையில் செல்லுமாறும் திருகோணமலை நீதிமன்ற நீதவான் நேற்று (11) உத்தரவிட்டார்.
இவ்வாறு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளவர் லொறியில் முதிரை மரக்குற்றிகளை ஏற்றிச்சென்ற சாரதியான பாலையூற்று-முருகன் கோயில் வீதியைச்சேர்ந்த சுவேந்திரன் தியாகரன் (24 வயது) எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.
இதேவேளை மரக்குற்றிகளை லொறியில் ஏற்றிச்சென்ற சாரதிகளுக்கு முற்சக்கர வண்டியில் சென்று வீதியில் இடம் பெறும் சம்பவங்களை தொலைபேசி மூலம் தெரியப்படுத்தி வந்த பாலையூற்று பகுதியைச்சேர்ந்த சுயேந்திரன் சுபராஜா (25 வயது) எனும் முச்சக்கர வண்டி சாரதியை ஒரு இலட்சம் ரூபாய் சரீர பிணையில் இருவரின் கையொப்பத்துடன் செல்லுமாறும் நவம்பர் மாதம் 02ம்திகதி நீதிமன்றத்திற்கு ஆஜராகுமாறும் உத்தரவிட்டார்.
அத்துடன் பொலிஸார் சோதனைக்குற்படுத்துவதற்காக லொறியை நிறுத்தும் போது தப்பிச்சென்ற மற்றைய லொறியின் சாரதியை கைது செய்யுமாறும் பொலிஸாருக்குக்கு நீதவான் உத்தரவிட்டார்.