குர்பான் கடமைகளை நிறைவேற்ற முஸ்லிம்களுக்கு தடை ஏற்படுத்தாதீர்; பொலிஸ் நிலையங்களுக்கு சுற்றுநிருபம்

0
178

sri-lanka-policeஉலகம் முழு­வதும் முஸ்­லிம்கள் இன்று ஹஜ்ஜுப் பெரு­நாளைக் கொண்­டாடும் நிலையில், அதன் ஓர்­அங்­க­மாக குர்பான் கட­மையை நிறை­வேற்ற ஏற்­பா­டு­களை செய்து வரு­கின்­றனர்.

இந் நிலையில் குர்பான் கட­மை­க­ளுக்­கான நட­வ­டிக்­கையின் போது முஸ்­லிம்­க­ளுக்கு தடை­களை ஏற்­ப­டுத்தும் வித­மாக இடை­யூ­று­களை ஏற்­ப­டுத்த வேண்டாம் என பொலிஸ் தலை­மை­யகம் அனைத்து பொலிஸ் நிலை­யங்­க­ளுக்கும் சுற்று நிரூபம் ஒன்றை அனுப்பி வைத்­துள்­ளது.

குறிப்­பாக குர்பான் கட­மை­க­ளுக்­கான கால் நடை­களை எடுத்துச் செல்லும் நட­வ­டிக்­கையின் போது இலகு முறையை கையா­ளு­மாறும் மிருக வதை சட்­டத்தை மீறும் வகையில் செயற்­ப­டுவோர் தொடர்பில் அவ­தா­ன­மாக இருக்­கு­மாறும் பொலிஸ் தலை­மை­யகம் அறி­வு­றுத்­தி­யுள்­ளது.

பொலிஸ் நிர்­வாகம் மற்றும் தேர்­தல்கள் கட­மை­க­ளுக்கு பொறுப்­பான சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் சந்­தன விக்­ர­ம­ரத்ன ஊடாக இந்த சுற்று நிருபம் அனைத்து பொலிஸ் நிலைய பொறுப்­ப­தி­கா­ரி­க­ளுக்கும் அனுப்பி வைக்­கப்­பட்­டுள்­ளது.

பொலிஸ் நிலைய பொறுப்­ப­தி­கா­ரி­க­ளுக்கு மேல­தி­க­மாக மாகா­ணங்­க­ளுக்கு பொறுப்­பான சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதி­பர்கள், மாவட்­டங்­க­ளுக்கு பொறுப்­பான பிரதிப் பொலிஸ் மா அதி­பர்கள் சிரேஷ்ட பொலிஸ் அத்­தி­யட்­சகர்கள், பொலிஸ் அத்­தி­யட்­சகர்கள் மற்றும் உதவி பொலிஸ் அத்­தி­யட்­சகர்கள் உள்­ளிட்ட அனை­வ­ருக்கும் இந்த சுற்று நிருபம் அனுப்பி வைக்­கப்­பட்­டுள்­ளது.

அதன்­படி இன்றும் நாளையும் நாளை மறு தினமும் முஸ்­லிம்கள் குர்பான் கட­மையை நிறை­வேற்­றுவர் என எதிர்ப்­பார்க்­கப்­படும் நிலையில், அதற்­காக கால் நடை­களை அவர்கள் குறிப்­பிட்ட இடங்­க­ளுக்கு எடுத்து செல்லும் போது பொலிஸார் இடை­யூறு ஏற்­ப­டுத்­தாது அக்­க­ட­மை­யினை அவர்கள் நிறை­வேற்ற சுமுக சூழலை ஏற்­ப­டுத்த அந்த சுற்று நிருபம் பரிந்­து­ரைத்­துள்­ளது.

எனினும் குர்பான் கட­மைக்கு மேல­தி­க­மாக அல்­லது அக்­க­ட­மையின் பெயரால் பசுக்­களை அல்­லது குர்பான் கட­மை­க­ளுக்கு அனு­ம­திக்­க­ப்ப­டாத கால் நடை­களை எவ­ரேனும் சட்­டத்­துக்கு புறம்­பாக கொண்டு சென்­றாலோ அல்­லது குர்­பா­னுக்­காக எடுத்துச் செல்லும் கால்­ந­டை­களை மிருக வதை சட்டத்துக்கு புறம்பாக கொடுமைப்படுத்தும் வகையில் எடுத்து சென்றாலோ அவர்களுக்கு எதிராக சட்டத்தை அமுல் செய்யவும் சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் சந்தன விக்ரமரத்ன அறிவுறுத்தியுள்ளார்.

#Metronews

LEAVE A REPLY