கல்முனையில் பூமியதிர்ச்சி !!

0
28

201609102315215367_earthquake-hits-in-delhi_secvpfஇலங்கையின் கிழக்கு மாகாணத்தின் அம்பாறை மாவட்டத்தின் கல்முனை பகுதியில் நேற்று இரவு 9.00 மணியளவில் பூமியதிர்ச்சி ஏற்பட்டதில் வீடுகளுக்கும் கட்டிடங்களுக்கும் சிறு சேதங்கள் ஏற்பட்டதுடன் நிலங்களிலும் சிறு,சிறு வெடிப்புக்களையும் காணக் கூடியதாகவுள்ளது .

இதனால் அங்கு சிறிது நேரம் பதற்றமும், பரபரப்பும் நிலவியது. சிறிது நேரத்தில் பொலிஸாரும் அப்பகுதிக்கு வந்து மக்களை பாதுகாப்பாக இருக்குமாறு அறிவுறுத்தினர்.

இதேவேளை, பெரு நாட்டின் வடக்குப் பகுதியில் நேற்று 6.1 ரிச்டர் அளவில் பயங்கர பூமியதிர்ச்சி பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

-VK-

LEAVE A REPLY