வடி காணிலிருந்து நீர் செல்லும் ஓடையில் சடலம் மீட்பு

0
51

(அப்துல்சலாம் யாசீம்)

Dead-body-in-morgue-006திருகோணமலை-தலைமையக பொலிஸ் பிரிவிற்குற்பட்ட இலிங்க நகர் பகுதியிலுள்ள வடி காணிலிருந்து நீர் செல்லும் ஓடையில் இன்று (11) காலை சடலமொன்று மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இவ்வாறு மீட்கப்பட்ட சடலம் திருகோணமலை-இலிங்க நகர் -18/19 யூதா கோயில் வீதியைச்சேர்ந்த எம்.ஜேசுராஜா (55வயது) எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.

சம்பவம் குறித்து தெரியவருவதாவது- வீட்டிலிருந்து நேற்று மாலை கடலுக்கு செல்வதாக சென்று இன்று அதிகாலை வீட்டுக்கு வராதமையினால் தேடிய போது வடிகாணிலிருந்து சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக ஆரம்ப கட்ட விசாரணையின் மூலம் ரெியவந்துள்ளது.

சடலம் தற்பொழுது திருகோணமலை பொது வைத்தியசாலை பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதுடன் தீவிர விசாரணைகளை தமைமையக பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

LEAVE A REPLY