கஞ்சா மற்றும் கஞ்சா சுருட்டுடன் வீதியில் நடமாடிய மூவர் கைது

0
130

Arrest(ஏ.எச்.ஏ. ஹுஸைன் )

கஞ்சாவையும் கஞ்சா சுருட்டையும் விற்பனைக்காக தம்வசம் வைத்துக் கொண்டு வீதியில் நடமாடிய மூவரை ஞாயிற்றுக்கிழமை (செப்ரெம்பெர் 11, 2016) தாம் கைது செய்திருப்பதாக ஏறாவூர் பொலிஸார் தெரிவித்தனர்.

கைதான சந்தேக நபர்கள் இருவரிடமிருந்தும் மொத்தம் 5590 மில்லிகிராம் கஞ்சாவும் மற்றைய நபரிடமிருந்து கஞ்சா சுருட்டொன்றும் கைப்பற்றப்பட்டுள்ளது. கஞ்சாவை வைத்திருந்த இருவரும் முறையே 22, மற்றும் 26 வயதுகளையுடையவர்கள் என்றும் இருவரில் ஏறாவூர் காளிகோயில் வீதியைச் ஒருவரிடமிருந்து 2400 மில்லிகிராம் கஞ்சாவும், மற்றையவரான ஏறாவூர் ஐயன்கேணியைச் சேர்ந்தவரிடமிருந்து 3190 மில்லிகிராம் கஞ்சாவும் கைப்பற்றப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

மேலும், ஏறாவூர் மிச்நகர் கிராமத்தைச் சேர்ந்த 22 வயதான நபர் வீதியில் கஞ்சா சுருட்டொன்றை விற்பனைக்காக வைத்திருந்தபோது கைது செய்யப்பட்டார். இச்சம்பவம் தொடர்பான விசாரணைகளை ஏறாவூர் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர். இவர்களை நீதிமன்றில் ஆஜர்படுத்தவுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

LEAVE A REPLY