இன்றிரவு வசந்தம் தொலைக்காட்சியில் NFGG தவிசாளர் அப்துர் ரஹ்மான்!

0
91

unnamed-4இன்று ( 11.09.16) இரவு 9 மணிக்கு இடம்பெறவுள்ள ‘வசந்தம்’ தொலைக்காட்சியின் ‘அதிர்வு’ அரசியல் கலந்துரையாடல் நிகழ்ச்சியில் NFGGயின் தவிசாளர் பொறியியலாளர் அப்துர் ரஹ்மானும் கலந்து கொள்கிறார்கள்.

இதில்….

அரசியல் தீர்வென்பது அரசியல்வாதிகளுக்கானதா? அல்லது மக்களுக்கானதா..?
Ø வடகிழக்கு இணைப்பின்றி தமிழ் மக்களின் பிரச்சனைக்கு தீர்வே கிடையாதா?
Ø கிழக்கை பிரித்து விட்டால் மாத்திரம் முஸ்லிம்களின் பிரச்சனைகள் அனைத்தும் தீரந்து விடுமா..?
Ø ‘யுத்த தர்மம்’ என்ற கடப்பாடு ‘புலி’களுக்கு மாத்திரமே உரியதா..? இராணுவத்தினருக்கு அந்தக்கடப்பாடு கிடையாதா..?
Ø அரசியல் கோசங்கள் மக்களுக்கான நிரந்தர நிலைப்பாடுகளா..? அல்லது அரசியல்வாதிகளின் சொந்த சௌகரியங்களிக்கான வெற்றுக் கொசங்களா.?
Ø தமிழ் மக்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிகளுக்கு நீதி வேண்டி அவர்கள் போராடும்போது அதற்கு குறுக்காக நிற்பது தர்மமாகுமா?
Ø முதலமைச்சர் போன்ற பதவிகளை பங்கு வைப்பதால் மாத்திரம் தமிழ் முஸ்லிம் உறவை கட்டியெழுப்ப முடியுமா?

….போன்ற பல்வேறு விடயங்களையும் பொறியியலாளர் அப்துர் ரஹ்மான் அவர்கள் விரிவாக பேசுகின்றார்.

இதில் முன்னாள் அமைச்சர் அதாவுள்ளாஹ் அவர்களும் கலந்து கொள்கின்றார். (தமிழ் தேசியக்கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி சுமந்திரன் அவர்களும் இந்நிகழ்ச்சியில் கலந்துகொள்வதாக இருந்தபோதிலும் இறுதி நேரத்தில்அவரால் கலந்து கொள்ள முடியவில்லை என அறிவிக்கப்பட்டது.)

இந்நிகழ்ச்சியில் NFGG தவிசாளர் அவர்கள் முன்வைக்கும் கருத்துக்கள் தொடர்பான உங்களது அபிப்பிராயங்களும் ஆலோசனைகளும் பெரிதும் வரவேற்கப்படுகின்றன.

LEAVE A REPLY