வீதிகளில் நடை பெறுகின்றவற்றை தகவல்களாக வழங்கிச்சென்ற முற்சக்கர வண்டியுடன் இரண்டு நபர் கைது

0
126

(அப்துல்சலாம் யாசீம்-)

Arrested44திருகோணமலை-கோமரங்கடவெல காட்டு வழியூடாக திருகோணமலை நகருக்கு 62 முதிரை மரக்குற்றிகளை கொண்டு சென்ற இரண்டு வாகனங்களையும்- வீதிகளில் நடை பெறுகின்றவற்றை தகவல்களாக வழங்கிச்சென்ற முற்சக்கர வண்டியுடன் இரண்டு நபர்களையும் இன்று அதிகாலை (11) கைது செய்துள்ளதாகவும் தப்பியோடிய நபரை கைது செய்வதற்குறிய நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாகவும் குச்சவௌி பொலிஸார் தெரிவித்தனர்.

இவ்வாறு கைது செய்யப்படவர்கள் திருகோணமலை-முருகன் கோயில் வீதி இல-94 வசித்து வரும் சுவேந்திரன் தியாகரன் (24 வயது) மற்றும் அதே இடத்தைச்சேர்ந்த எஸ்.சுபராஜா (25 வயது) எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.

கோமரங்கடவெல காட்டு வழியூடாக இரண்டு லொறிகளில் 62 முதிரை மரக்குற்றிகளை ஏற்றிச்சசெல்வதாக பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற தகவலையடுத்து அவ்வீதியினூடாக சென்ற லொறியினை நிறுத்திய போது ஒரு சாரதி லொறியை நிறுத்திவிட்டு தப்பியோடியதாகவும் அவரை கைது செய்யும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

கைது செய்யப்பட்ட இரண்டு சந்தேக நபர்களையும் இன்று திருகோணமலை நீதிமன்றத்திற்கு ஆஜர்படுத்தவுள்ளதாகவும் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருவதாகவும் குச்சவௌி பொலிஸார் தெரிவித்தனர்.

LEAVE A REPLY