முதலமைச்சர் நஸிர் அகமட் பிறைந்துரைச்சேனை அஸ்கர் வித்தியாலயத்தற்கு நிதி ஒதுக்கீடு

0
72

unnamed-2(எஸ்.ஐ.எம்.நிப்ராஸ்)

கிழக்கு மாகாண முதலமைச்சர்  அல்ஹாபிழ் நஸிர் அகமட் முயற்சியினால் கல்குடா பிரதேச பாடசாலைக்கு கிழக்கு மாகாண கல்வி திணைக்களத்தினுடாக நிதியொதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அண்மைய பாடசாலை,சிறந்த பாடசாலை எனும் தேசிய நிகழ்ச்சி திட்டத்தின் கீழ் இப்பாடசாலைகள் அபிவிருத்தி செய்யப்படவுள்ளது.

பிறைந்துரைச்சேனை அஸ்கர் வி்த்தியாலயத்திற்கு 2 மாடி கட்டிடத்திற்காக 18.1 மில்லியன் ரூபாவும் அதே பாடசாலைக்கு 2 மாடி கட்டிட ஆய்வு கூடம், நூலகத்திற்கு 17.16 பில்லியன் ரூபாவும் அதிகளவிளான நிதி ஒதுக்கீடு பிறைந்துரைச்சேனை அஸ்கர் வித்தியாலயத்திற்கு கெளரவ முதலமைச்சர்  ஒதுக்கீடு செய்தது வரவேற்கத்தக்க விடயமாகும்.

அத்தோடு காவத்தமுனை அல் அமீன் வித்தியாலயத்திற்கும் 2 மாடிக் கட்டிடத்திற்கு 17.16 மில்லியன் ரூபாவும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY