பாகிஸ்தான் டி20 அணியில் உமர் அக்மல்

0
99

201609101919552777_umar-akmal-returns-to-pakistan-t20-squad_secvpfபாகிஸ்தான் – வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையிலான மூன்று வகை கிரிக்கெட் தொடர் ஐக்கிய எமிரேட்ஸ் நாடுகளில் நடைபெற இருக்கிறது.

இந்த மாதம் 23-ந்தேதி முதல் 27-ந்தேதி வரை டி20 தொடரை நடைபெற இருக்கிறது. இதற்கான பாகிஸ்தான் அணி அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் முன்னணி பேட்ஸ்மேன் உமர் அக்மல் சேர்க்கப்பட்டுள்ளார்.

உமர் அக்மல் இந்தியாவில் நடைபெற்ற டி20 உலகக்கோப்பையில் இடம்பிடித்திருந்தார். அதன்பின் பாகிஸ்தான் இங்கிலாந்து செல்வதற்காக பயிற்சி முகாம் ஏற்பாடு செய்திருந்தது. இதில் ஒழுங்கீனமாக நடந்து கொண்டதாக அக்மல் மீது புகார் அளிக்கப்பட்டது. அதனடிப்படையில் அவர் இங்கிலாந்து தொடரில் சேர்க்கப்படவில்லை.

உள்ளூர் தொடர்களில் சிறப்பாக விளையாடியதால் தற்போது வெஸ்ட் இண்டீஸ் அணிக்கெதிரான டி20 தொடரில் இடம்பிடித்துள்ளார்.

வெஸ்ட் இண்டீஸ் அணிக்கெதிரான டி20 தொடருக்கான அணியில் இடம்பிடித்துள்ள வீரர்கள் விவரம்:-

1. சர்பிராஸ் அஹமது (கேப்டன்), 2. காலித் லத்தீப், 3. ஷர்ஜீல் கான், 4. சோயிப் மாலிக், 5. மொகமது ரிஸ்வான், 6. பாபர் ஆசம், 7. மொகமது நவாஸ், 8. இமாத் வாசிம், 9. மொகமது ஆமீர், 10. வஹாப் ரியாஸ், 11. ஹசன் அலி, 12. சோஹைல் தன்வீர், 13. ரம்மான் ரயீஸ், 14. உமர் அக்மல், 15. சாத் நசீம்.

LEAVE A REPLY