அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் உப தலைவர் ஜமீலின் கருத்தை வரவேற்பதாக முஸ்லிம் உலமா கட்சி

0
110

(ஜுனைட்.எம்.பஹ்த்)

நாட்டில் முஸ்லிம்கள் எதிர் கொள்ளும் பிரச்சினைகளுக்கு முகம் கொடுக்கும் வகையில் முஸ்லிம் கட்சிகளை இணைத்து முஸ்லிம் கூட்டமைப்பை ஏற்படுத்துவதற்கு அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தயார் என்ற அதன் உப தலைவர் ஜமீலின் கருத்தை பெரிதும் வரவேற்பதாக முஸ்லிம் உலமா கட்சி தெரிவித்துள்ளது.

இது பற்றி அக்கட்சி மேலும் தெரிவித்துள்ளதாவது,

பாராளுமன்றத்திலும் அதற்கு வெளியிலும் அரசியல் செயற்பாட்டில் உள்ள முஸ்லிம் கட்சிகள் இணைந்து கூட்டமைப்பாக செயற்பட முன் வர வேண்டும் என்ற கருத்தை உலமா கட்சி 2006ம் ஆண்டு முதல் சொல்லி வருகிறது.

இதனை நடைமுறைப்படுத்தும் வகையில் யாப்பு ஒன்றும் வரையப்பட்டு முஸ்லிம் கட்சிகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. அதில் கட்சிகளின் தலைவர்கள் தனித்தலைமை என்றில்லாது அனைவரும் சம தலைவராக செயற்பட வேண்டும் என்றும் செயலாளராக நியமிக்கப்படுபவர் மேற்படி கட்சிகளின் செயலாளர்களுக்கிடையில் நிர்வாக சபையினரின் தேர்தல் வாக்களிப்பு மூலம் தெரிவு செய்யப்பட வேண்டும் என சொல்லியிருந்தோம். ஆனாலும் முஸ்லிம் கூட்டமைப்பை உருவாக்கும் எமது சிந்தனைக்கு முஸ்லிம் கட்சிகளிடமிருந்து வரவேற்பு கிடைக்கவில்லை என்பது சமூகத்துக்கே நஷ்டமாகியது.

ஆனாலும் இதன் தேவையை முழு சமூகமும் இன்று நன்குணர்ந்துள்ளமை மகிழ்வை தருகிறது. அதே போல் இவ்வாறான கூட்டமைப்புக்கு தயாரென அ இ ம காங்கிரஸ் மட்டுமே பகிரங்கமாக தெரிவித்ததன் மூலம் அக்கட்சியின் முஸ்லிம் சமூக பற்றை உலமா கட்சி பாராட்டுகிறது.

ஆகவே முஸ்லிம் கட்சிகள் இணைந்து “முஸ்லிம் கட்சிகளின் கூட்டமைப்பு” என்ற பெயரில் கூட்டமைப்பை ஏற்படுத்தி செயற்பட முன்வருமாறு அனைத்து முஸ்லிம் கட்சிகளையும் உலமா கட்சி கேட்டுக்கொள்கிறது.

LEAVE A REPLY