பெரு நாட்டில் கடும் நிலநடுக்கம்: ரிக்டர் அளவுகோலில் 6.0 ஆக பதிவு

0
86

201609101808305335_peru-earthquake-61-magnitude-quake-hits-northeast-of_secvpfபெரு நாட்டின் வடக்குப் பகுதியில் இன்று காலை கடுமையான நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவுகோலில் அது 6.0 ஆக பதிவானதாக முதலில் தகவல் வெளியானது. பின்னர் அது 6.1 ரிக்டர் என அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் கூறியுள்ளது.

மொயாம்பமா நகரின் வடக்கே 50 கிலோ மீட்டர் தொலைவில் பூமிக்கடியில் 114 கி.மீ. ஆழத்தில் நிலநடுக்கம் மையம் கொண்டிருந்தது. இதன் மையப்புள்ளி மழைக்காடுகள் என்பதால் பெரிய அளவில் பாதிப்பு ஏற்படாது என தகவல் வெளியாகி உள்ளது.

சான் மார்ட்டின் பிராந்திய தலைநகரான மொயாம்பமா நகரில் 40 ஆயிரத்துக்கும் அதிகமான மக்கள் வசிக்கின்றனர். நலநடுக்கத்தினால் இப்பகுதி மக்களுக்கு ஏதேனும் பாதிப்பு ஏற்பட்டதா? என்பது குறித்த தகவல் உடனடியாக வெளியாகவில்லை.

LEAVE A REPLY