வங்காளதேச தொழிற்சாலை தீ விபத்தில் பலி 26 ஆக உயர்வு

0
98

201609101836332410_26-killed-70-injured-in-bangladesh-factory-fire_secvpfவங்காளதேச தலைநகர் டாக்காவின் வடபகுதியில் உள்ள டோங்காவில் பொருட்களை ‘பேக்கிங்’ செய்யும் பெட்டிகளை தயாரிக்கும் பேக்கேஜிங் தொழிற்சாலை ஒன்றுள்ளது. இந்த தொழிற்சாலையில் இன்று காலை வழக்கம்போல் உற்பத்தி தொடர்பான வேலைகள் நடந்து வந்தன.

காலை சுமார் 6.15 மணியளவில் இங்குள்ள ஒரு ராட்சத கொதிகலன் (பாய்லர்) திடீரென வெடித்து சிதறியது. இதையடுத்து, நான்கு மாடிகளை கொண்ட அந்த தொழிற்சாலையில் மளமளவென தீ பரவியது. உள்ளே இருந்த தொழிலாளர்கள் பீதியால் அலறியபடியே உயிர்பயத்துடன் வெளியே ஓடி வந்தனர்.

அவர்களில் பத்து பேர் தீயில் சிக்கி பரிதாபமாக உயிரிழந்தனர். மருத்துவமனையில் சேர்க்கப்பட்டவர்களில் அடுத்தடுத்து 11 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். மேலும் ஏராளமானோர் பலத்த தீக்காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

இந்நிலையில், தீவிர சிகிச்சை பெற்று வந்த 5 பேர் உயிரிழந்தனர். இதன்மூலம் உயிரிழப்பு 26 ஆக உயர்ந்துள்ளது. இன்னும் 74 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இவர்களில் 10 பேரின் உடல்நிலை கவலைக்கிடமாக இருப்பதாக அதிகாரிகள் கூறுகின்றனர்.

இந்த தீ விபத்து குறித்து விசாரணை நடத்துவதற்காக காசிப்பூர் நிர்வாக கலெக்டர் ரேகனல் தலைமையில் 5 அதிகாரிகள் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது.

தொழிற்சாலைகளுக்கு கடுமையான கட்டுப்பாடுகள் அறிமுகம் செய்தபோதிலும் ஒவ்வொரு ஆண்டும் தொழிலாளர்கள் இறப்பது தொடர்கிறது. கடந்த ஆண்டு 13 பேர் இறந்தனர். 2012ம் ஆண்டு 112 தொழிலாளர்கள் இறந்தனர். 2013ம் ஆண்டு ராணா பிளாசா கார்மென்ட் வளாகம் இடிந்து விழுந்ததில் 1135 பேர் பலியாகினர்.

LEAVE A REPLY