காற்று மாசு படுவதன் காரணமாக ஆண்டுதோறும் 55 லடசம் பேர் மரணம் ஆய்வறிக்கை

0
157

201609101341475913_polluted-air-causes-55-million-deaths-a-year-new-research_secvpfகாற்று மாசு காரணமாக உலகெங்கும் ஆண்டுதோறும் 55 லட்சம் பேர் இறப்பதாக உலக வங்கி ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உலக வங்கியும், சுகாதார அளவீடுகள் மற்றும் மதிப்பீடுகளுக்கான நிறுவனமும் இணைந்து மேற்கொண்ட ஆய்வுகளின் அடிப்படையில் அறிக்கை ஒன்று வெளியிடப்பட்டது.

அதில், உலகளவில் 4-வது அபாயகரமான காரணியாக காற்று மாசு திகழ்கிறது. உலகில் 85 சதவீதம் பேர் சுகாதாரமற்ற காற்றை சுவாசிக்கின்றனர். சீனா மற்றும் இந்தியாவில் ஒரு சதவீதம் பேர் மட்டுமே பாதுகாப்பான காற்றை சுவாசிக்கின்றனர்.

காற்று மாசு காரணமாக இந்தியாவில் 2013 ம் ஆண்டில் மட்டும் 14 லட்சம் பேர் இறந்துள்ளனர். சீனாவில் மிக மோசம் 17 லட்சம் பேர் இறந்துள்ளனர். 60 சதவீதம் உயிரிழப்பு இந்தியா மற்றும் சீனாவில் நிகழ்வதாக அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

புகைபிடிப்பதால் ஏற்படும் மரணங்களைப் போல பத்து சதவீத இறப்புகளுக்கு காற்றுமாசு காரணமாக உள்ளது என அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.காற்று மாசு காரணமாக சர்வதேச அளவில் 200 பில்லியன் டாலர் பொருளாதார விரயம் ஏற்பட்டுள்ளது. சீனாவே இதனால் மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ளது.

சீனாவின் மொத்த தேசிய வருமானத்தில் பத்தில் ஒரு பகுதி காற்று மாசுபடுவதால் ஏற்படும் பிரச்சனைகளை சமாளிக்கவும், நலத்திட்டங்களுக்காவும் செலவாகிறது.மனித உழைப்பு நாட்களும் காற்று மாசு காரணமாக ஏற்படும் பிரச்சனைகளால் பாதிக்கப்படுகின்றன.

இந்தியா மற்றும் கம்போடியாவிலும் கூட, காற்று மாசு காரணமாக தேசிய மொத்த உற்பத்தியில் எட்டு சதவீதம் செலவாகிறது.கடந்த 2013 ஆம் ஆண்டு முதல் எடுக்கப்பட்ட புள்ளி விபரங்களின் அடிப்படையில் உலக வங்கியின் இந்த அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY