திஸ்ஸ அத்தநாயக்கவுக்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல்

0
138

tissa-attanayakeபோலி ஆவணங்கள் தயாரித்தல் உள்ளிட்ட மூன்று குற்றச்சாட்டுக்கள் சம்பந்தமாக முன்னாள் சுகாதார அமைச்சர் திஸ்ஸ அத்தநாயக்கவுக்கு எதிராக சட்ட மா அதிபரினால் கொழும்பு மேல் நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

2015 ஜனவரி 08ம் திகதி ஜனாதிபதித் தேர்தலுக்கு முன்னர் போலி ஆவணங்கள் தயாரித்தல், இனங்களுக்கு இடையில் வைராக்கியத்தை ஏற்படுத்தல் மற்றும் ஜனாதிபதித் தேர்தல் முடிவுகளுக்கு அழுத்தங்களை பிரயோகித்தல் என்பனவே அவருக்கு எதிரான குற்றச்சாட்டுக்கள். அதன்படி குறித்த குற்றச்சாட்டுக்களின் கீழ் திஸ்ஸ அத்தநாயக்கவிற்கு எதிராக கொழும்பு மேல் நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

2014 ஆம் அண்டு டிசம்பர் மாதம் அன்று பொது வேட்பாளராக ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட்ட தற்போதைய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் அன்றைய எதிர்க்கட்சித் தலைவரான தற்போதைய பிரதமர் ரணில் விக்ரமசிங்க ஆகியோரின் கையெழுத்துக்களை போலியாக இட்ட ஆவணம் ஒன்றை, ஊடகங்களுக்கு வழங்கியமை உட்பட மூன்று குற்றச்சாட்டுக்களின் கீழ் சட்டமா அதிபர் இந்த குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்துள்ளார்.

ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளராக கடமையாற்றிய வந்த திஸ்ஸ அத்தநாயக்க, அன்றைய மகிந்த ராஜபக்ஷ அரசாங்கத்தில் இணைந்து கொண்டதுடன் சுகாதார அமைச்சராகவும் பதவியேற்றுக்கொண்டார்.

LEAVE A REPLY