சூழ்ச்சியில் வீழ்ந்து போன துருக்கி: இரு தலைக்கொல்லி எறும்பான நிலை

0
186

-முஹம்மது ராஜி-

201608080500341872_Giant-Turkish-anti-coup-rally-packs-Istanbul-waterfront-area_SECVPFஒரு நாட்டை பரம்பரை பரம்பரையாக நெருக்கடிக்குள் தள்ள வேண்டுமானால் அதன் அண்டை நாட்டோடு கொழுவி விடுவது , பக்கத்து வீட்டில் வில்லங்கத்தை உருவாக்கி விடுவது என்பது இங்கிலீஷ் தாத்தாக்கள் காலனித்துவ காலத்தில் இருந்து சுதந்திரம் கொடுக்க ஆரம்பித்த காலம் வரை கையாண்ட பிரித்தாளும் புத்தியின் ஒரு பகுதி.

இதே யுத்தியைத்தான் நவீன அமெரிக்காவும் செய்து அதில் வெற்றிக்கொடியும் நாட்டி வருகிறது .கொரியாக்களை பிரித்து ஜப்பானிலும் தென் கொரியாவிலும் இராணுவத்தை நிறுத்தி தூர கிழக்கில் அரசியல் நடத்தி வருகின்றது முதல் தாய்வானை வைத்து சீனாவை அடக்கி வாசிக்க வைத்தது வரை இதே யுத்திதான் ஊரை பிரித்து கூத்தாடி நாடகம் ஆடுவதற்கு அமெரிக்கவுக்கு கை கொடுத்து வருகின்றது .

1990 களின் பிற்பகுதிகளில் தாலிபான்களை பாகிஸ்தான் மூலமே உருவாக்கி அதே தாலிபான்களை
பின்னர் பகையாளியாக்கி அதன் மூலமே பாகிஸ்தானை சிக்கித்தவிக்க வைத்து சின்னா பின்னமாக்கியது அமெரிக்கா.

சிரியாவிலும் ஈராக்கிலும் ஆரம்பத்தில் குர்திஷ் போராட்ட குழுக்களை வைத்து துருக்கியை சுக்கு நூறாக்க முயன்ற போதும் பிராந்தியத்தில் இடம்பெற்ற வேறு விடயங்கள் இதனை அமெரிக்காவுக்கு அடைய முடியாமல் ஆக்கி விட்டது .

ஐ .எஸ் அமைப்பை யார் ஆரம்பத்தில் உருவாக்கினார்கள் என்கிற சர்ச்சை டொனால்ட் ட்ரம்ப் தொடங்கி பள்ளியில் பேஷ் இமாம் வரை தொடர்ந்து கொண்டு இருக்கிற நிலையில் , ஐ எஸ் அமைப்பின் பிரச்சினையில் குளிர் காய அமெரிக்கா திட்டமிட்டது என்பது மட்டும் உண்மை . தலிபான்கள் எழுச்சியை வைத்து எப்படி பாகிஸ்தானை குட்டிச்சுச்சுவராக்கியதோ அதே போல துருக்கியையும் ஆக்கப் போட்ட அமெரிக்காவின் திட்டம் ஆரம்பத்தில் வெற்றி அளிக்காத போதும் இப்போது அமெரிக்காவுக்கு வசந்த காலமாக ஆகி விட்டது .

ஆரம்பத்தில் ஐ எஸ் பிரச்சினையை அடுத்த ஊர் பிரச்சினையாக பார்த்த துருக்கி, வெளியக நெருக்கடிகளால் சொந்த வீட்டு பிரச்சினையாக இப்போது பார்க்கத் தொடங்கி விட்டது. இதுதான் அமெரிக்கவுக்கு கிடைத்த மிகப்பெரும் வெற்றி .

அமெரிக்காவினாலேயே ஈராக்கில் தோற்கடிக்க முடியாமல் போன பிரச்சினை , துருக்கியால் எங்கே தீர்க்கப்படப்போகிறது ? , தோற்கடிக்கப்படப்போகிறது?

ஐ. எஸ் சின் வாசல் படிகளாக இருந்த அஸாஸ் , ஜராபிலஸ் ஆகிய எல்லை கிராமங்கள் துருக்கிய ஆதரவு படைகளால் கைப்பற்றப்பட்டு அடைக்கப்பட்டுள்ளன . இப்போது துருக்கி இரு தரப்பு எதிரிகளை சம்பாதித்துள்ளது நண்பன் என்கிற வேஷம் போட்டுள்ள முனாபிக்க்கின் அனுசரணை கொண்ட குர்திஷ் போராட்ட குழுக்கள் ஒரு புறம் , மரணத்தைக் கண்டு அஞ்சாத, தோற்கடிக்கப்படுவது மிக கடினமான ஐ. எஸ் இன்னொரு புறம் .

நேற்று தல் அல் ஹவா நகரில் துருக்கிய தாங்கி மீது ஐ எஸ் போராளிகள் நடத்திய தாக்குதலில் மூன்று துருக்கிய இராணுவத்தினர் கொல்லப்பட்டுள்ளனர் . இந்த வாரத்தில் மாத்திரம் ஐ எஸ் போராளிகளால் ஏழு துருக்கிய இராணுவத்தினர் கொல்லப்பட்டுள்ளனர் .

நீண்ட தொடர்ச்சியான , வெற்றி கொள்ளப்பட முடியாத , வலி கொண்ட யுத்தம் ஒன்றுக்குள் துருக்கி தன்னை இப்போது திணித்துக்கொண்டுள்ளது .

சூழ்ச்சியில் வீழ்ந்துள்ள இன்னொரு முஸ்லீம் நாடு ஒன்று, இன்னொரு அழிவுக்கு தயாராகி விட்டது என்பது மாத்திரம் கடும் கவலைக்குரிய உண்மை .

இனியென்ன .. துருக்கி, உயிர்களையும் பொருளாதாரத்தையும் பலி கொடுக்கும் நீண்ட யுத்ததுக்கு தயாராகி விட்டது . சிரியாவுக்குள் மட்டுமல்ல துருக்கியின் முக்கிய நகரங்களில் குண்டுகள் வெடிக்கும் .துருக்கிய நகரங்கள் இனி கராச்சிகள் போல அடிக்கடி கண்ணீர் வடிக்க வேண்டி இருக்கும்.

LEAVE A REPLY