புத்தளத்தில் 4 வயது சிறுவன் முஹம்மது பாதிர் கடத்தல்

0
134

puttam-boyபுத்தளம் வான் வீதியில் வதியும் 04 வயது சிறுவன் ஒருவர் இனந்தெரியாத பெண் ஒருவரால் கடத்தி செல்லப்பட்டுள்ளதாக புத்தளம் பொலிசார் தெரிவித்தனர்.

இச்சம்வபவம் நேற்று வெள்ளிக்கிழமை (09) முற்பகல் 11.30 மணியளவில் இடம்பெற்றுள்ளது. முஹம்மது ஹுசைன் என்பவரின் புதல்வன் முஹம்மது பாதிர் என்பவரே இவ்வாறு கடத்தி செல்லப்பட்டுள்ளார்.

இரவல் வாங்க வந்த சல்வார் கமீஸ் அணிந்த பெண் ஒருவர் சிறு பிள்ளை ஒன்றை இறுக அணைத்து தூக்கிச் சென்றதாக சிறுவனின் வீட்டுக்கு அருகில் வதியும் பெண் ஒருவர் தெரிவித்துள்ளார்.

எனினும் இரவல் வாங்க வந்ததாக கூறப்படும் பெண்னோடு கூடவே வந்த மற்றுமொரு 20 வயது மதிக்கத்தக்க யுவதி ஒருவர் புத்தளம் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார். புத்தளம் பொலிசார் இது தொடர்பான விசாரணைகளை துரித கதியில் மேற்கொண்டு வருகின்றனர்.

#Thinakaran

LEAVE A REPLY