திருகோணமலை-புத்தளம் பிரதான வீதியில் கிளைமோர் மீட்பு

0
160

(அப்துல்சலாம் யாசீம்)

claymore-2திருகோணமலை-புத்தளம் பிரதான வீதியில் பன்குளம் இராணுவ முகாமிற்கு அருகில் இன்று (09) கிளைமோர் குண்டொன்று மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இராணுவ முகாமிற்கு அருகிலுள்ள குளத்தருகில் மேட்டு நில பயிர்ச்செய்கையில் ஈடுபட்டுக்கொண்டிருந்த இராணுவர் பொலிஸாருக்கு வழங்கிய தகவலையடுத்து திருகோணமலை  நீதிமன்றத்திற்கு அறிக்கையொன்றினை சமர்பித்தனர்.
இதனையடுத்து நீதிமன்ற நீதவான் சர்தாபுர விஷேட அதிரடிப்படையினருக்கு கிளைமோர் குண்டை வெடிக்க வைப்பதற்குறிய அனுமதியை வழங்கியுள்ளதாகவும் மொறவெவ பொலிஸார் தெரிவித்தனர்.

LEAVE A REPLY