பெறுமதியான செயலிகளை இலவசமாக வழங்கும் அப்பிள்

0
86

625-0-560-350-160-300-053-800-668-160-90அப்பிள் நிறுவனம் காசு கொடுத்து தரவிறக்க வேண்டிய சில செயலிகளை (Apps) இலவசமாக வழங்குகிறது.

மொத்தமாக 11 செயலிகளை குறித்த காலத்திற்கு இலவசமாக பெற முடியும். ஐபோன்-7, ஐபோன்-பிளஸ் முதலான ஸ்மார்ட்போன்கள் அறிமுகப்படுத்தப்படவுள்ள தருணத்தில், இலவச தரவிறக்கம் பற்றிய அறிவித்தல் வெளியாகிறது.

இவற்றில் Future என்ற செயலி முக்கியமானது. இது உங்கள் நாளேட்டை இலகுவாக்க வழிவகுக்கும். அன்றாடப்பணிகளை பதிவு செய்து வைக்கும் பட்சத்தில், சகல பணிகளையும் ஒரே பார்வையில் காண இந்தச் செயலி உதவும்.

IPhocus என்ற செயலி போனைப் பயன்படுத்தி வீடியோ படம் பிடிக்கையில், கமெரா அசைவுகளைக் கட்டுப்படுத்த உதவுகிறது.

புதிய தயாரிப்புகள் அறிமுகப்படுத்தப்படும் சந்தர்ப்பத்தில் இலவசமாக செயலிகளை வழங்குவது அப்பிளின் மரபு. இவை எத்தனை காலத்திற்கு இலவசமாக கிடைக்கும் என்பதை உறுதிப்படுத்தும் தகவல்கள் வெளியாகவில்லை.

LEAVE A REPLY